அங்குசம் சேனலில் இணைய

நீங்க ஒரு காபி பிரியரா? இந்த கட்டுரையை படிக்காதீர்கள்….

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்தக் கட்டுரையை படிப்பதற்கு முன் தாங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால் இதை படிப்பதை தவிர்த்து விடுவது சிறந்தது என்று கூறுவேன். பின் அதை மீறியும் இதை படித்தால் என்னை யாரும் கமெண்டில் திட்ட வேண்டாம். ஆம் இந்த உலகம் முழுவதும் பரவலாக காபி குடிக்கும் பழக்க இருந்து வருகிறது. உலகத்தில் ஃபின்லாந்து நாட்டவர்கள் அதிக காபி அருந்துகிறார்கள். நார்வே, டென்மார்க் அடுத்த அடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த வரிசையில் இந்தியா 23வது இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் உலகில் தினமும் 2.25 பில்லியன் கப் காபி உட்கொள்ளப்படுகிறது. காபியை வைத்து ஃபில்டர் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபன் நீக்கப்பட்டது காபி என பல வகைகள் தயாரிக்கப்படுகிறது. இதுவெல்லாம் பல்வேறு வகையான காபி கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் இதில் உலகிலேயே மிக விலை உயர்ந்த காபி வகை எது தெரியுமா?

புனுகுப் பூனை
புனுகுப் பூனை

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கோபி லுவாக் என்னும் காபி கொட்டை தான் உலகின் மிகவும் விலை உயர்ந்தது. இது ஒரு காபி செடியில் இருந்து பறிக்கப்படுவது அல்ல மாறாக ஒரு விலங்கின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தான் கூடுதல் சுவாரசியம். இந்தோனிசியாவிலுள்ள புனுகுப் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் கோபி லுவாக் என்னும் காபி கொட்டையின் 500 கிராம் 700 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 62,000) வரை விற்கப்படுகிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கோபி லுவாக் என்னும் காபி கொட்டை
கோபி லுவாக் என்னும் காபி கொட்டை

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதற்காக அந்த வகை பூனைகளின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது. இது அதிக சத்தானது எனக் கூறப்படுவதால் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசியாவின் மூன்றாவது பெரிய காபி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளராக உள்ள இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் மாவட்டத்தில் சிறிய அளவில் புனுகுப் பூனையின் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த காபியை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. மேலும் வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஒரு கிலோ ரூ. 20,000 முதல் 25,000 வரை விற்கப்படும் நிலையில் இந்தியாவில் இதன் விலை வெறும் ரூ.8,000 தான். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் என்ன காபி பிரியர்களே ஒரு கப் கோப்பி லுவாக் குடிக்க தயாரா???

 

 —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.