வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கலந்தாய்வு கூட்டம் !

பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்-15 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சௌமியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பூதலூர் வட்டாட்சியர் விவேகானந்தன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சரக வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், மின்சார துறை, பொதுப்பணித்துறை போன்ற பல்வேறு துறையினரும் பங்கேற்றனர்.

கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வு கூட்டம்

குளம் வாய்க்கால் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் மின்கம்பம் பழுதுபட்டதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அரசு கட்டிடங்களை கண்காணித்து வைத்திருக்க வேண்டும் எனவும் தனித்துணை ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.

 

 —    தஞ்சை க.நடராசன்

Comments are closed, but trackbacks and pingbacks are open.