அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: ஹார்லிக்ஸ் மைசூர் பாக்!

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே!! தீபாவளி வந்தாச்சு அதனால ஸ்வீட்ஸ் சாப்பிடாம தீபாவளி கொண்டாடினா எப்படி வாங்க ஹார்லிக்ஸ் வச்சு அதுல மைசூர் பாக் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கடலை மாவு ஒரு கப், சர்க்கரை இரண்டு கப், நெய் 5 ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, ஹார்லிக்ஸ் அரை கப்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

செய்முறை:

Admission Enquiry Form

ஒரு இரும்பு கடாயில் ஒரு கப் தண்ணீர் இரண்டு கப் சர்க்கரை ஊற்றி அதில் சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அதில் சலித்த கடலை மாவை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அதில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஸ்பூன் நெய் ஊத்தி நைசாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் காய்ச்சிய எண்ணெய் ஒரு கப் ஊற்றி மேலும் ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் எண்ணெய் இப்படி மூன்று முறை ஊற்றி நன்கு கிளற அதன் பின் அரை கப் ஹார்லிக்ஸ் சேர்த்து கிளறி மேலும் ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி கடாயில் ஒட்டாத அளவிற்கு வந்ததும் கிளறி ஒரு ட்ரேவில் நெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி ஆறியதும் தேவையான அளவிற்கு கட் செய்து அதன் மேல் சிறிது சர்க்கரையை தூவி அலங்கரித்து பரிமாறினால் சுவையான ஹார்லிக்ஸ் மைசூர் பாக் ரெடி!!! புத்தாடைகள் அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று தீப ஒளி திருநாளை இனிப்போடு கொண்டாடி மகிழுங்கள்..!

 

 —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.