டாடா பிராண்ட் அம்பாஸடரானார் டைரக்டர் அட்லீ!
ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர படமான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் ‘ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்’ என்ற விளம்பர படத்தின் மூலம் டாடா பிராண்ட் அம்பாஸடர் ஆகியுள்ளார்.
இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் அட்லீ . இயக்குநர் அட்லீயின் பிரத்யேகமான ஸ்டைலில் பிரம்மாண்டம், இதுவரை காணாத விஷுவல் எஃபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை, ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்தையே வைரலாக கலக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளது!
இது குறித்து *இயக்குநர் அட்லீ* கூறும் போது,
“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை. இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள். அதனால் தான் நான் என் முதல் விளம்பரத்துக்கு ஒப்புக்கொண்டேன். ரன்வீரின் அசரவைக்கும் துறுதுறுப்பு, பாபி சார் மாயம், ஸ்ரீலீலாவின் ஃப்ரெஷ்னெஸ், இதையெல்லாம் நாங்கள் மிகச்சிறப்பாக ஒன்று சேர்த்தோம். இனி அதை பார்வையாளர்கள் ரசிக்கட்டும்.” என்கிறார்.
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், தலைவர் *தீபிகா பான்* என்ன சொல்றாருன்னா
“சிங்ஸில் ஒவ்வொரு உணவும் ஒரு ப்ளாக்பஸ்டர் போல இருக்க வேண்டும், மிக உறுதியானதாகவும், சுவைமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ரன்வீர் சிங் மீண்டும் ஆக்ஷனில் களமிறங்கியிருப்பதால் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.இது எங்கள் மிகப்பெரிய, மிகுந்த உற்சாகமான தேசி சைனீஸ் கொண்டாட்டம். இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்!” என்றார்.
இந்தப் படத்தில் ஷங்கர்– எசான்–லாய் இசையமைப்பில் உருவான புகழ்பெற்ற “மை நேம் இஸ் ரன்வீர் ஜிங்” என்ற ஆந்தம் இடம்பெற்றுள்ளது. அர்ஜித் சிங் குரலில், குல்சார் சாஹப் எழுதிய பாடல் இப்போது சாய் அபயங்கர் மூலம் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டு, தற்போது எங்கெங்கும் ஒலிபரப்பாகி வருகிறது.
“டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம், டாடா குழுமத்தின் முக்கிய உணவு மற்றும் பானங்களின் பிராண்டுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. அதன் பரந்த வரிசையில் டீ, காஃபி, நீர், உப்பு, பருப்பு, மசாலா, ரெடி-டூ-ஈட் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை அடங்கும். டாடா டீ, டெட்லி, டாடா காஃபி கிராண்ட், ஹிமாலயன், டாடா சால்ட், டாடா சோல்ஃபுல், சிங்ஸ் சீக்ரெட், ஸ்மித் & ஜோன்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளுடைய இந்நிறுவனம், 17,618 கோடி ரூபாய் வருடாந்திர வருவாயுடன், 275, மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்றடைகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் உலகளவிலும் மிகப்பெரிய அளவில் கோலோச்சி வருகிறது” என்கிறார் தீபிகா பான்.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.