40+ வயதினர் இந்திய IT துறையில் ஒரு சாபம்.
நீங்கள் இந்தியாவில் ஐடி துறையில் வேலை செய்கிறீர்களா 40 வயது ஆகிவிட்டாதா? இயற்கை விவசாயம் தான் இனி ஒரே சரியான வாழ்வியல், ஐடியில் உங்கள் கதை க்ளோஸ். ஆனால் நீங்கள் இயற்கை விவசாயத்திலும் ஒன்றும் சாதிக்க மாட்டீர்கள் என்பது இன்னொரு உண்மை. ஏன் என்றால் இந்திய ஐடி துறை இயங்கும் விதம் அப்படி. இந்திய ஐடி துறைக்கு புதியவர் என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு..
உலகிலேயே இந்தியர்கள் என்றால் ஐடி, ஐடி என்றால் இந்தியர்கள் போன்ற பிம்பம் கட்டமையக்கப்படுகிறது, இது ஒரு டுப்போகோர் பிம்பம். முதலில் இந்த உண்மையை புரிந்துக்கொண்டு பார்த்தால் இந்தியாவில் ஐடி துறை என்பது முழுக்க முழுக்க சேவை துறை மட்டும் தான். அதாவது இங்கு எந்த புதிய மென்பொருள் உருவாக்கம், புதியதை உருவாக்குவதற்கான ஆய்வுகள், Innovative development என்று எதுவும் நடப்பதில்லை (மொத்த ஐடி துறையில் 5% கிழ் இருக்கும் நிறுவனங்களை தவிற) மாறாக ஏற்கனவே உருவாக்கி இருக்கும் மென்பொருட்களை அப்டேட் செய்வது, அதாற்கான சேவை வழங்குவது, தொழில்நுட்ப அஸிச்டெண்ட் வேலை மட்டும் தான் இந்திய ஐடி துறையில் பெரும்பான்மையாக செய்கிறார்கள்.
முதல் காரணம் : Cheap labour. மிக குறைந்த விலைக்கு இந்த சேவை இந்தியாவில் கிடைப்பதால். ஒருவேளை பிலிபைன்ஸ், சீனா, ஆப்ரிக்கா நாடுகளில் இருப்பவர்கள் இந்த வேலையை இன்னும் குறைந்த விலைக்கு செய்துக்கொடுத்தால் ? நிறுவனங்கள் அங்கே சென்று விடும்.
அடுத்து இங்கு பலர் repeated task தான் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். அல்லது நிறுவனங்களே அதை செய்பவர்களை தான் வைத்துக்கொள்கிறார்கள். கொஞ்சம் விவரமரிந்தவரோ, சிந்திப்பவராக இருந்தால் நிறுவனங்கள் அவரை கட்டம் கட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நிறுவனங்களுக்கு தேவை மீண்டும் மீண்டும் செய்ததையே செய்யும் ஒரு சிந்திக்காத எந்திரம். சம்பளம் அதிகம் கேட்காத எந்திரம். அதனால் தான் இந்திய ஐடி துறையில் ஒருவேளை அனுபவம் இருந்தாலும், இந்தியாவில் செய்யும் வேலைக்கு அந்த அனுபவம் தேவையே இல்லை. சீனியாரானல் மேனேஜ்மென்டுக்கு போ, இல்லை என்றால் வீட்டிறகு போ. உன் தொழில்நுட்ப அனுபவம் ஒன்றும் வேண்டாம் அதை இன்னொரு 5 வருட அனுபவம் உள்ளவர் அதே வேலை செய்வார் .. என்று நிறுவனக்கள் கை விரித்துவிடும். அதாவது innovation இல்லாமல் நீங்கள் செய்த வேலையினால பெற்ற அனுபவத்தால் ஒரு பயணும் இல்லை.
நீங்கள் செய்யும் வேலையை உங்களை விட குறைந்த கூலிக்கு ஒருவர் செய்யவராதவரை உங்களுக்கு வேலை நிச்சையம். அடுத்து வேலையை காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி அலுவலக அரசியல். அதை செய்தால் சிலர் பிழைக்க கூடும் பிழைக்கிறார்கள். 40 வயதுக்குமேல் அனுபவம், அறிவு சார்ந்து ஒரு மரியாதையும் நிறுவனத்தில் கிடைக்காது அப்படி என்றால் பெரிய ப்ரோமோஷன், சம்பல உயர்வெல்லாம் கிடைக்கது. ஒருவேளை நீங்கள் முன்பே நிதியை சேமித்து திட்டமிருந்தால் அல்லது சொத்து கித்து இருந்தால் ஹைக் இல்லாமல் காலத்தை ஓட்டலாம். கொஞ்சம் அலுவலக அரசியல் தெரிந்தால் தப்பிக்கலாம் இது எதுவுமே தெரியவில்லை என்றால் இட்லி கடை வைக்கலாம், இயற்கை விவசாயம் செய்யலாம் என தோன்றும். இங்கு தான் டிவிஸ்ட்டே.
நீங்கள் கல்வி கற்க்கும் முறையிலேயே உங்களுக்கு analysis, critical thinking, reseliancy, innovation கற்றுகொடுக்கபடுவதில்லை.அங்கே நீங்கள் ஒரு மார்க் மெஷின். இந்திய கல்வி முறையில் இப்படியான விஷயங்கள் வாத்தியாருக்கே தெரியாது, அப்படியே தெரிந்தாலும் அதற்கெல்லாம் மதிப்பெண் இல்லை என்பதால் யாரும் கண்டுகொள்வதுமில்லை. ஆசிரியர் முயர்ச்சி எடுத்தாலும் பெற்றோர்களும், பள்ளியும் அவரை அமுக்கிவிடும். இப்படி எதுவுமே பயிற்றுவிக்கப்பாடாத நீங்கள் பிரியாணி கடை Franchise , இயற்கை விவசாயம், பிட்காயின் மோசடியில் சிக்குவதில ஒரு ஆச்சரியமுமில்லை, அதை பற்றியெல்லாம் அனலிசிஸ் செய்ய நீங்கள் பயிற்விக்கவும்படவில்லை.

ஒருவேளை நீங்கள் ஐடி துறைக்கு புதியவர், என்றாலும் சரி 40 வயது கடந்தவர் என்றாலும் சரி இனி இதில் கவனம் செலுத்துங்கள்..
- Crirical thinking, Innovation, reselincy பற்றி தெரிந்துக்கொண்டு அதை உங்கள் வாழ்வியலில் இணைத்து பயிர்ச்சியை தொடங்குகள். இன்று ஆன்லைஅனில் நல்ல பயிர்சிகள் கிடைகின்றன.
- Financial Management அவசியம் கற்றுக்கொள்ளுங்கள். பணம் நிறந்தரமாக வராது அதானல் சேமிப்பு முதலீடு பற்றிய கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள்.
- ஒவ்வொரு ஐந்து வருட்டத்திற்கும் மாறி வரும் சூழலை கணித்து உங்களை தகவமைத்துக்கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள் கற்றலை அதிகபடுத்துங்கள்.
- உங்கள் துறை, நிதி மேலான்மை, extra carricular, hobby இதற்கான குழுவில் இணைந்து உங்களளை uptodate ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
இதை மீறி இந்திய ஐடி நிறுவனங்கள் இப்படி சேவை நிறுவனங்களாகவும், இந்திய கல்வியமைப்பு மதிப்பெண் சூரர்ர்களையும் உருவாக்கி கொண்டிந்தால் நாம் தான் சுதாரித்து தப்பித்துக்கொள்ல வேண்டும். அவர்கள் உஷாராகி வேறு நாடுகளில் கிளையை தொடங்கிவிட்டார்கள்.
-வினோத் ஆறுமுகம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.