பொங்கலுக்கு வருகிறார்கள் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’
சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலிகான் தயாரித்து , இயக்கி ஹீரோவாக வும் நடித்துள்ள கலகலப்பான காதல் படம் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ .பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதால் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாவது செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருக்கிறார்களாம்.
“ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தை தமிழில் மட்டுமே உருவாக்கியுள்ளோம்,” என்கிறார் சமீர் .
இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து *சமீர் அலி கான்*, “இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்து வெற்றிகரமாக எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்,” என்று கூறினார்.
படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.