மெண்டலாகிச் சாகும் இன்ஃப்ளூயன்சர்கள் !
“சமூக ஊடகப் புகழின் பேராசை எவ்வாறு ஒருவரின் வாழ்க்கையையும் மனதையும் மாற்றுகிறது என்பதை ஆராயும் புதிய மனோ தத்துவ திகில் படம் *’அன்கில்- 123’* (Unkill-123).
வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை சாம் அன்டன் டைரக்ட் பண்ணுகிறார். சவரி முத்து இணைந்து எழுதியுள்ளார். கதையின் நாயகனாக இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் சக்திவாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நடிகை ‘பிதாமகன்’ சங்கீதா நடிக்கிறார்.
இந்தக் கதை, புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருடைய வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது. புகழின் அழுத்தம், தனிமை, மற்றும் அடையாள இழப்பு ஆகியவை எவ்வாறு ஒருவரின் உண்மையான உலகத்தைப் பாதிக்கிறது என்பதை படம் வெளிப்படுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு பதிவிற்கு பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சிப் போராட்டங்களையும் ஒப்பீடு, பொறாமை, மற்றும் தன்னம்பிக்கை குறைபாடு ஆகியவற்றின் மோதல்களையும் இந்தப் படம் உண்மையாக சித்தரிக்கிறது.
இதப்பத்தி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்ன சொல்றாருன்னா…
“சமூக ஊடகங்கள் மூலம் புகழ்பெற்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த புகழுக்கான உணர்ச்சி விலை பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. தனிமை, ஒப்பீடு, மற்றும் மன அழுத்தம் ஆகியவை அதன் மறுபக்கம். இந்த புதிய ‘புகழ் கலாச்சாரம்’ உள்ள பிரகாசத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் வலியையும் வெளிப்படுத்துகிறது” என்கிறார்.
நடிகர்கள்:
அனுராக் கஷ்யப்
சங்கீதா
தொழில் நுட்பக் குழுவினர்
இயக்கம்: சாம் அன்டன்
இணை எழுத்து: சவரி முத்து
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
இசை: ஜெரார்ட் ஃபெலிக்ஸ்
காஸ்ட்யூம்: சிந்துஜா அசோக்,
கலை இயக்கம்: சௌந்தர் ராஜ்
நடனம் : அஸர் & ரேமண்ட் காலனன்
ஸ்டண்ட் : கோட்டீஸ்வரன்,
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத் & பாரஸ் ரியாஸ்
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.