இந்து கோயிலில் வழிபாடு செய்த பிரிட்டன் மன்னர் !
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்கு வருகை தந்து, அங்கு நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். ஐரோப்பாவில் இருக்கும் இந்த பாரம்பரிய கற்கோயிலில், இந்து மரபுகளின்படி அவர்கள் வழிபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
கோயிலுக்கு வருகை தந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலின் தலைமை அர்ச்சகர், மன்னரின் மணிக்கட்டில் புனித கயிற்றைக் கட்டியிருக்கிறார். மன்னரும் ராணியும் தங்களது காலணிகளைக் கழற்றிவிட்டு, முத்துக்கள் மற்றும் மலர்களால் ஆன மாலைகளை அணிந்து கோயிலுக்குள் சென்றனர். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு “தாமதமான தீபாவளி வாழ்த்துகளையும்” அவர் தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த 1995-ம் ஆண்டு திறக்கப்பட்ட நீஸ்டன் கோயிலுக்கு, மன்னர் சார்லஸ் இதற்கு முன்பும் வந்திருக்கிறார். அவர் இதற்கு முன்பு 1996, 2007, மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளிலும் இந்த கோயிலுக்கு வருகை தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.