காணாமல் போன சிறுமிகள்! பத்திரமாக மீட்டு கொடுத்த காவல்துறை !
அரியலூர் மாவட்டம் தளவாய் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல் போனதாக தளவாய் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தளவாய் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன சிறுமிகளில் ஒருவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அவரது தாயிடம் சண்டையிட்டுக் கொண்டு அவரது தாய்மாமன் ஊரான தளவாய்க்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவரது தாய் மாமன் மகளான மற்றொரு சிறுமியும் படிக்க பிடிக்காமல் எங்கேயாவது சென்று விடலாம் என்ற மனநிலையில் இருந்தவரை அழைத்துக் கொண்டு இருவரும் சென்னைக்கு சென்றுள்ளார்கள் என தகவல் கிடைக்க பெற்றது.
இதனையடுத்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படியும், அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் வழிகாட்டுதலின்படியும், தளவாய் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பெண் தலைமைக் காவலர் மஞ்சுளா மற்றும் காணாமல் போன சிறுமிகள் இருவரின் தாயார் இருவர் ஆகியோரை அழைத்துக் கொண்டு, 30.11.2025 அன்று சென்னை சென்று சிறுமிகளை பத்திரமாக மீட்டு, 01.12.2025 சிறுமிகளை தளவாய் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிறுமிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.