அரசியல் முடிவுகள் எல்லாம் அப்புறம்!
ஆயிரம் சொன்னாலும் “விஜய்” என்னும் இந்த மனிதனிடம் ஒரு Pull Off Caliber இருக்கிறது. இயற்கை அதை எல்லோருக்கும் வழங்கிவிடுவதில்லை.
அரங்கு நிறைந்த 100000 பேர் + ரெக்கார்ட் படைத்த டெஸிபல் சத்தம் எல்லாம் இனி எந்த நடிகருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம். காரோட்டப் போனவரால் மட்டுமே இயலும் ஆனால் அவரதை விரும்புவதில்லை.
வாழ்த்துகள். இவ்வளவு பெரும் மக்களும் செல்வாக்கும் சிலருக்கு கொடுக்கும் இயற்கை, எதிர்ப் பதமாக இன்னும் சிலருக்கு பாராமுகம் காட்டுவது மிகப்பெரும் முரண்.

ஜோதி யராஜி. விசாகப்பட்டினத்தை சேர்ந்த தடகள வீராங்கனை. May 29 – 2025 Asian Athletics Championship இல் நடந்த தடகளப்போட்டியில் வெறும் 12.96 வினாடிகளில் ஓடிக்கடந்து தங்கம் வென்றார் ஜோதி.
“அதுக்கு…?”
அந்த சாதனை 27 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாத சாதனை.
“அதுக்கு…?”
அந்தச்சாதனையை நம் மக்கள் யாரும்……
“ஹேய் நிறுத்து நிறுத்து….! இப்ப என்ன? ஜோதியோட சாதனையை அரசாங்கம் கண்டுக்கல, மீடியா கண்டுக்கல, மக்கள் கண்டுக்கல…அதானே சொல்லப்போற…?”
இல்லை.!
அன்று அவர் ஓடி தங்கம் ஜெயித்து சாதனை செய்தபோது, அரங்கத்தில் இந்தியர் ஒருவர் கூட இல்லை.!!!
அங்குமிங்கும் சுற்றிப்பார்க்கிறார்.
வென்றபின் கட்டிப்பிடிக்கவோ, கண்ணீர் சிந்துவதை தேற்றுவதற்ககோ கூட ஒருவரும் இல்லை. புகைப்படங்கள் கூட, மற்ற வீராங்கனைகளின் தயவால் கிட்டிய ஒன்று.
தனியே வந்தார், தங்கம் வென்றார், தனியே போனார்.
ஜெயித்தபின்னும் ஒருவர், குறிப்பாக பெண்ணொருத்தி தனியே கண்டுகொள்ளப்படாமல் இருந்தால், அந்த நாட்டிற்கு “இந்தியா” என்று பெயர்.
இன்னொரு வெட்கக்கேடான இயற்கை முரண், அதற்கு மக்கள்தொகை, 140+கோடி.
— Writer Charithraa’s








Comments are closed, but trackbacks and pingbacks are open.