தரைக்கடைகள் அகற்றப்பட்ட விவகாரம் – மாநகராட்சி தந்த விளக்கம்!
திருச்சி என்.எஸ்.பி. சாலையில் அதிரடியாக 124 தரைக்கடைகளை தரைமட்டமாக்கியிருக்கிறது, திருச்சி மாநகராட்சி நிர்வாகம். ஆக்கிரமிப்புகளை போலீசார் துணையுடன் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அத்துமீறி அகற்றியதாக வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர். தங்கள் கண் எதிரே கடைகள் அகற்றப்பட்ட நிலையில், கண் கலங்க அவர்கள் ”வாழவிடு வாழவிடு” என்ற கதறல் காண்போரை கண்கலங்க செய்தது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1 கோட்டத்திற்கு உட்பட்ட என் எஸ் பி ரோடு பகுதிகளில் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சன்னதி முதல் தெப்பக்குளம் வரை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு படியும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர விற்பனை குழு கலந்தாலோசனை கூட்டம் 10-12-2025 அன்று ஒரு மனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் மாற்று இடங்களான சிங்காரத்தோப்பு பகுதியில் பூம்புகார் முதல் தமிழ்ச் சங்கம் பில்டிங் வரை மற்றும் மாவட்ட மத்திய நூலகம் பின்புறம் மதுரை ரோடு மற்றும் லலிதா ஜுவல்லரி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டு இன்று மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் இப்பணி நடந்து முடிந்தது.









Comments are closed, but trackbacks and pingbacks are open.