மூன்றாம் பாலினத்தவருக்கு பணி நியமன ஆணை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி ஊர்க்காவல் படை சேவைகளில் மூன்றாம் பாலினத்தவர்களைச் சேர்ப்பதற்கான முன்னோடி முயற்சி திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 50 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 15 நாட்கள் முறையான பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு போக்குவரத்து மேலாண்மை, கூட்டக் கட்டுப்பாடு, பேரிடர் மேலாண்மையில் உதவி மற்றும் காவல்துறைக்கு பொது உதவியாக பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் ஊர்காவல் படை சேவைக்கு தேர்வான 5 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி முடித்து இன்று (13.01.2026)-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப பணிநியமன ஆணையினை வழங்கி திருச்சி மாநகர ஊர்காவல் படையில் இணைத்தும், அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கியும், சிறப்பாக பணியாற்ற தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.