திமுக எம்எல்ஏவின் ‘மை லார்ட்’ டிரெய்லர்!

ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘  படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார், மற்றும் சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு: நீரவ் ஷா, பாடல்கள் : யுகபாரதி இசை: ஷான் ரோல்டன்   கலை இயக்கம்: முனி பால்ராஜ்  படத்தொகுப்பு :  சத்யராஜ் நடராஜன் ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா நடனம் :     எம். ஷெரீப், சண்டைப் பயிற்சி: பி. சி. ஸ்டண்ட். இந்தப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘மை லார்ட் ‘ படத்தின் டிரெய்லர்  நேற்று (ஜனவரி 19) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.                     –

—   ஜெடிஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.