அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தொலைந்து போன 2 பவுன் நகை ! மீட்டு கொடுத்த சத்துணவு அமைப்பாளர் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஆயத்த மாநாடு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது‌. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மண் நேர்மைக்கு பெயர் பெற்றது என்பதை நிரூபித்த சத்துணவு அமைப்பாளர் எமல்டா .

250-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். கூட்டத்தில் 2 பவுன் தங்க நகை கீழே கிடந்துள்ளது. நகையை  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வரும் திருமதி ஜா.எமல்டா பார்த்துள்ளார்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நகையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாது என உணர்ந்தவர்  மாவட்டச் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம்  நகையை ஒப்படைத்துள்ளார். உடனே அவர் பொருளுக்குச் சொந்தக்காரர் பொருளின் அடையாளத்தைச் சொல்லி பெற்றுச் செல்லுமாறு அறிவிப்பு செய்ய புதிதாக நியமனமான சமையல் உதவியாளர் கைக்குழந்தையுடன் வந்து நன்றியுடன் பொருளைப் பெற்று சென்றார்.

திருப்பத்தூர் மண், வீரம், விவேகம் மட்டுமல்ல நாணயம், நேர்மைக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று மேடையிலே கூறி, அனைவரின் கரவொலிக்கு மத்தியில் எமல்டா பாராட்டப் பெற்றுள்ளார். திருப்பத்தூர் ஆர்.சி. பாத்திமா நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்  ஜான் போஸ்கோ அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.