அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கவிஞர்கள் கா.ந.கல்யாணசுந்தரம், அன்பாதவன் நூல்கள் அறிமுக விழா!

திருச்சியில் அடகு நகையை விற்க

சென்னையில் 49 ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 21  புதன்கிழமை நிறைவடைந்த நாளன்று எண்  181 – நூலேணி புத்தக அரங்கில் கவிஞர்கள் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் ஜென் ஹைக்கூ நூல் “ உயிர்த்தெழும் சிந்தனைகள் “,  “ மூன்றடிகளில் மலர்ந்த புறநானூறு “ நூல்களை நூலேணி பதிப்பக உரிமையாளரும் அண்மையில் காரைக்குடி அழ வள்ளியப்பா விருத்தாளருமான  கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.  மற்றும் கவிஞர் அன்பாதவன் அவர்களின் சிறுகதை தொகுப்பு நூல் விளிம்பு நூலினை முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அறிமுகம் செய்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நூல்கள் அறிமுக விழாமுன்னதாக அன்னை இராஜேஸ்வரி பதிப்பக வளாகத்தில் கவிஞர் அன்பாதவன் அவர்களின் விளிம்பு சிறுகதை தொகுப்பு நூலினை பேராசிரியை மணவாளன் சுஜாதா அவர்கள் வெளியிட பதிப்பக உரிமையாளர் உதயக்கண்ணன் பெற்றுக்கொண்டார். நூலேணி பதிப்பக வளாகத்தில் நூல் அறிமுக நிகழ்வில் கவிஞர்கள் பாண்டிச்சேரி விண்மீன் பாண்டியன் மற்றும் குடந்தை பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அயல்நாட்டுக் கவிஞர்கள் பலரது ஹைக்கூ, தன்முனைக் கவிதைகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் போன்றவற்றை நூலேணி பதிப்பக வளாகத்தில் வாசகர்கள் விரும்பி வாங்கிச்சென்றதாக பதிப்பக உரிமையாளர் கவிஞர் கன்னிக்கோயில் இராஜா குறிப்பிட்டுப் பேசுகையில் குழந்தை, சிறுவர் இலக்கிய புத்தகங்களுக்கான அங்கீகாரங்களை தமிழ் இலக்கிய அமைப்புகள் மேலும் வளப்படுத்தி நூலாசிரியர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி சாலை ஆசியாவிலேயே பெரியது மட்டுமல்ல ஆயிரம் புதிப்பகங்கள் பங்குபெற்று வாசகர்கள் பெருமளவில் புத்தகங்களை வாங்கிச்செல்லும் சந்தையாக விளங்குகிறது என்றும் புகழாரம் சூட்டினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.