வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்கப் பயிற்சி….
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும் கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்கப் பயிற்சி” (Agricultural Machinery Demonstrator) 16 நாட்களுக்கு இலவசமாக வேளாண்மைப் பொறியியல் துறையின் அரசு இயந்திர கலப்பை பணிமனை, திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில், டிராக்டரின் வெட்டுத் தோற்ற (Tractor’s Cut Section Model) மாதிரியைக் கொண்டு டிராக்டரின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்த செயல் விளக்கமும். இதர வேளாண் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்தும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே, 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் கலந்து பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு (SSLC) /தொழிற்பயிற்சி (ITI) / பட்டயப் படிப்பு (Diploma) / பட்டப்படிப்பு (Degree) இவற்றில் ஏதேனும் ஒன்று பயின்றவராக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியானது 10.02.2026 முதல் 27.02.2026 வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம், கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட விவரங்களுடன் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), இயந்திர கலப்பை பணிமனை, எண்.2,வ.உ.சி.சாலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்ற முகவரிக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கைப்பேசியில் “VetriNichayam” என்ற இணையதள செயலியினை “Playstore ல் பதிவிறக்கம் செய்தும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு 8675561335, 6381333580 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.