அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குளிர்பானத்தில் மிதந்த அருணை பூச்சி ! ஆர்ப்பாட்டத்தில் மாணவா்கள் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் விற்கப்பட்ட குளிர்பானம் (பவன்டோவில் ) அருணை பூச்சி உடல் பாகங்கள் கிடந்தது மாணவர்களின் உடல் உபாதைகள் ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கண்டனத்திற்குரியது.

2026 June 11 - 17 Angusam Book

கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் கேண்டீனில் பவன்டோ குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதன் உள்ளே அசுத்தமான பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்லூரி மாணவா்கள் ஆர்ப்பாட்டம்இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.கே. மோகன் தலைமையில் கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேண்டீனில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சூர்யா, மாநிலக்குழு உறுப்பினர் சுதேசனா, மாவட்ட குழு உறுப்பினர்கள் சர்மி, ஷாலினி, கிளை நிர்வாகி நந்தா பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.