தி.மு.க மாநில மாநாடு: திருச்சி – போக்குவரத்து மாற்றம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் வரும் 09.03.2026 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் பெரும் திரள் கூடும் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 09.03.2026 அன்று காலை 6 மணி முதல் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
மேற்கு மண்டலத்திலிருந்து கரூர் மற்றும் தொட்டியம் வழியாக வரும் வாகனங்கள் குளித்தலை – துறையூர் – நாகலாபுரம் – நக்கசேலம் – செட்டிகுளம் – இரூர் – ஆலந்தூர் – நெடுங்கூர் – சிறுகனூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று அதே வழியாக வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டலத்திலிருந்து மதுரை வழியாக வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி – விராலிமலை – பஞ்சப்பூர் – மன்னார்புரம் – நம்பர் 1 டோல்கேட் – Y ரோடு – பணமங்கலம் – குமுளூர் கட் ரோடு – தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூரை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தஞ்சாவூர் – திருமலைசமுத்திரம் – பூதலூர் – பூண்டி – செங்கரையூர் பாலம் – அன்பில் – பூவாளூர் – குமுளூர் – தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் மாநாட்டு திடலுக்கு செல்ல வேண்டும்.
அதேபோல் கடலூர் மற்றும் அரியலூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அரியலூர் – குன்னம் – பெரம்பலூர் – சிறுவாச்சூர் – ஆலந்தூர் – பாடாலூர் – சிறுகனூர் வழியாக செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வழியாக வரும் வாகனங்கள் தங்கம்மாபட்டி – வையம்பட்டி – மணப்பாறை – ராம்ஜிநகர் – கருமண்டபம் – மன்னார்புரம் – நம்பர் 1 டோல்கேட் – Y ரோடு – பணமங்கலம் – குமுளூர் – தச்சங்குறிச்சி – சிறுகனூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று அதே வழியாக திரும்ப வேண்டும்.
வடக்கு மண்டலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெரம்பலூர் – சிறுவாச்சூர் – பாடாலூர் – சிறுகனூர் வழியாக செல்ல வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நாளில் கனரக வாகனங்களுக்கு மாற்று வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திண்டுக்கல், மதுரை, கரூர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் பைபாஸ் – துறையூர் – முசிறி – குளித்தலை – மணப்பாறை – வையம்பட்டி / துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் விராலிமலை – மணப்பாறை – குளித்தலை – முசிறி – துறையூர் – பெரம்பலூர் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மற்றும் டால்மியா பகுதிகளில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் டால்மியா – கீழப்பழுவூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் வழியாக பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநாட்டிற்கு வரும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இந்த போக்குவரத்து மாற்ற அறிவிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.