மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது ! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் – சிஎஸ்ஐ பெர்னாண்டஸ் ரத்னராஜ்
மதுரை பசுமலையில் உள்ள தனியார் மஹாலில் கிறிஸ்தவ நல அமைப்பு சார்பில் கிறிஸ்தவ மக்களின் அரசியல் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து சிஎஸ்ஐ பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்ன ராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
மதுரையிலே இப்பொழுது அரசியல் கோரிக்கை மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த அரசியல் கோரிக்கை மாநாடு என்பது இதுவரை கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வழியிலே மக்களை நடத்துவதற்கும் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் அது மாத்திரமல்ல மருத்துவமனைகளை நிறுவுவதற்கும் அனைத்து மக்களுக்கு சேவை செய்வதிலும் கிறிஸ்தவர்கள் பெரிய தொண்டாற்றி வருகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்தது.
இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று. இன்றைய காலகட்டத்திலே சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகின்ற சூழலில் அரசியலிலும் பொது வாழ்விலும் கிறிஸ்தவர்கள் வரவேண்டும் என்பது எங்களுடைய இன்றியமையாத தேவையாக இருக்கிறது. பொதுவாக கிறிஸ்தவர்கள் வாக்களிக்கிறவர்களாக மாத்திரமே செயல்பட்டு வருகிறார்கள் என்ற ஒரு எண்ண ஓட்டம் இருந்து வருகிறது. அதை மாற்றி கிறிஸ்தவர்கள் பொது வாழ்விற்கு வர தயாராக இருக்கிறார்கள். பொதுவாழ்வு எங்களை அழைக்கிறது என்ற உணர்வோடு இன்றைய நாளிலே நாங்கள் இந்த இடத்திலே அரசியல் பயணத்தை தொடர்வதற்காக கூடியிருக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்திலே நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கிறிஸ்தவ நிறுவனங்களிலே படித்தவர்கள் தான் இன்றைக்கு மிகப்பெரிய அமைச்சர்களாக அது ஒன்றிய அமைச்சரவையாக இருந்தாலும் சரி அல்லது எந்த துறையாக இருந்தாலும் சரி அவர்கள் படித்த இடங்களை நீங்கள் தேடிப்போய் பாருங்கள் அவர்கள் படித்த இடங்கள் எல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை செய்வதை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்ற கிறிஸ்தவர்கள் அரசியல் பாதையிலும் செயல்படுகின்பொழுது அது நிச்சயமாக தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் கொண்டு வரும் என்பதற்கு உறுதியாக எங்களால் நம்ப முடிகிறது.

அரசியல் கொள்கை உங்களுக்கு என்ன பற்றிய கேள்விக்கு …
அரசியல் கொள்கை என்பது கிறிஸ்தவர்களுக்கு உண்டான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும். மதரீதியாக பிளவுபடுத்தக்கூடாது. எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை.
கூட்டணிக்கு ஏதும் முடிவெடுத்திருக்கீங்களா… சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கா பற்றிய கேள்விக்கு …….
இன்றைக்குத்தான் ஆரம்பித்திருக்கிறோம் எங்களுடைய மக்களுடைய கருத்துக்களை எல்லாம் கேட்க இருக்கிறோம். கேட்ட பிறகுதான் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்ன மக்கள் சொல்கிறார்கள் என்பதையெல்லாம் கேட்க செயற்குழு இருக்கிறது. திருச்சபையினுடைய மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். பேராயர்கள் எல்லாம் ஆதரவு தந்திருக்கிறார்கள். எல்லோரோடும் கலந்து என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை கலந்து பேசி முடிவுகள் எடுப்போம்.
அனைத்து மாவட்ட 234 தொகுதியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் நாங்கள் மக்களை அழைக்கவில்லை கிறிஸ்தவ நிர்வாகிகளை மட்டும் அழைத்திருக்கிறோம்.
இதற்கு முன்னாடி PTR ஒரு கட்சி வச்சிருக்காரு அவருக்கு ஒரு கட்சி இருக்கு கிறிஸ்தவர்கள் எந்த அளவுக்கான மாற்றத்தை ஏற்படுத்துவாங்க நாங்கள் மற்றவர்களை ஒப்பிடவிரும்பவில்லை நாங்கள் சொல்வது இதுவரை ஆன்மீகப்பணி, மருத்துவப்பணி, கல்விப்பணியிலே எங்களுடைய கவனம் இருந்தது இப்போது பொது வாழ்வு பணியிலும் எங்களை நாங்கள் இணைக்கிறோம்.
பசுமலையில் இந்த மீட்டிங் நடத்துவதற்கான காரணம்..
பசுமலை என்னுடைய பகுதி நான் இந்த பசுமலையைச் சார்ந்தவன் எனவே நான் இங்கு கூட்டத்தை நடத்திருக்கிறேன் மற்றபடி அதற்கு அரசியல் பின்னணி எதுவும் கிடையாது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.