கல்லூரியில் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் கூட்டம் !
கல்லூரியில் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் கூட்டம் !
![கல்லூரியில் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் கூட்டம் !](https://angusam.com/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-18-at-8.57.06-PM.jpeg)
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 18.01.2024 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் கூட்டம் திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தால் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சிறப்பு தாசில்தார் (தேர்தல்) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி கு. முத்துச்சாமி கலந்து கொண்டு வாக்காளர் பெயர் சேர்ப்பு, வாக்குப் பதிவிடும் முறை, வாக்காளர் உரிமைகள் குறித்தும் மாணவிகளுக்கு பல பயனுள்ள தகவல்களை வழங்கினார். புதிய வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இரத்ததானம் வழங்குவோர் சங்கத் தலைவர் பிளட்ஷாம் கலந்து கொண்டு வாக்காளர் குறித்தும் வாக்குப் பதிவுகள் குறித்தும் பல பயனுள்ள தகவல்களை வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி ஆனி சேவியர், கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஜோஸ்பின், முனைவர் மோரிஸ் பிரின்ஸ் அவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவானது நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பி. மெர்லின் கோகிலா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனைவர் கு. டாலி ஆரோக்கியமேரி, பேராசிரியர் குழந்தை பிரியா அவர்களும் கலந்து கொண்டனர்.