விலையுயர்ந்த புல்லட் வண்டியோடு போதையில் மட்டையான மிலிட்டரி ’ஆபிசர்’ ! – வீடியோ !
விலையுயர்ந்த புல்லட் வண்டியோடு போதையில் மட்டையான மிலிட்டரி ’ஆபிசர்’ !
21.05.2023 அன்று இரவு திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள டாஸ்மாக்கில் போதையை போட்ட அந்த ஆசாமி போதை தலைக்கேறி அங்கேயே மல்லாந்து கிடந்தார். கவர்மென்ட் சாராயக்கடைகள் தோறும் மட்டையாகி கிடப்பதென்பதெல்லாம் சகஜமான ஒன்றுதான். இங்கே மட்டையாகிக் கிடந்தது, ’சாதாரன குடிமகன்’ அல்ல! விலையுயர்ந்த புல்லட் வண்டியோடு மல்லாந்து கிடந்தது மிலிட்டரி ’ஆபிசர்’!
வீடியோ லிங்
டாஸ்மாக் பார் ஊழியர்கள் போலீஸ் பேட்ரோலுக்கு தகவல் சொல்லி அவர்களது விசாரணையில், மிலிட்டரி ’ஆபிசர்’ என்ற விவரம் அறிந்து, சம்பந்தபட்ட மிலிட்டரி அலுவலகத்துக்கும் தகவல் சொன்னார்கள். சற்றுநேரத்தில், மிலிட்டரி வாகனம் சகிதம் வந்து அந்த ’எலைட்’ குடிகார மிலிட்டரி ஆபிசரை அள்ளிப்போட்டுக் கொண்டு போனார்கள்.
சந்தையில் விற்பனையாகும் சரக்கு கள்ளச் சாராயமா? விஷச் சாராயமா? என்ற ஆராய்ச்சி முடிவை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கும் பொறுப்பு டி.ஜி.பி.க்கு! முச்சந்தியில் சரிந்து கிடக்கும் மட்டை கேஸ்களை அள்ளிப்போடும் பொறுப்பு பேட்ரோல் போலீசு காரனுக்கு!
– ஸ்பை