முதல்முறையாக கழிவறை, தண்ணீர் தொட்டி குளுகுளு ஏசி , கலக்கும் நவீன கண்காணிப்பு கேமரா – அசத்திய எம்.எல்.ஏ
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த படியே உணவு உண்ணும் வீடியோ வைரலாகியிருக்கிறது. சிக்னலில் ஒரு நிமிடம் நிற்பதற்குக்கூட நம்மில் பலருக்கு பொறுமையிருக்காது. ஆனால், எந்நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சாலையின் நடுவே நின்றுகொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போக்குவரத்து போலீசாரின் நிலை நிச்சயம் பரிதாபத்திற்குரியது தான்.
அதேபோல, கண்காணிப்பு கோபுரத்தின் உச்சியில் நின்று கண்காணிப்பில் ஈடுபடும் போலீசாரின் நிலையும் அதேதான். அதுவும் பெண் போலீசாரின் நிலை இன்னும் கொடுமையானது. இத்தகைய சிக்கல்களை உணர்ந்து, இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்திலேயே முன்மாதிரியாகவும் முதன்முறையாகவும் திருச்சியில் அமைந்திருக்கிறது, நவீன வசதிகளுடன்கூடிய போக்குவரத்து கண்காணிப்பு கோபுரம்.
திருச்சி காந்தி மார்கெட் சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கோபுரம் தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கழிவறை; அதற்கு மேல் 4 அடியில் தண்ணீர் தொட்டி; அதற்கு மேல் 8 அடி உயரத்தில் குளிர்சாதன வசதியுடன் நான்குபுறமும் கண்காணிக்கும்படியான அறை என 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
காந்தி மார்கெட் பகுதியை சுற்றியுள்ள 12 கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஒரே இடத்தில் அமர்ந்தபடியே பெரிய திரையில் காணவும்; இங்கிருந்தபடி அங்கு பணியாற்றும் காவலர்களுக்கு ஆலோசணைகளை வழங்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஏற்பாட்டில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார். திருச்சி மாநகராட்சியின் துணைமேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர் மு.மதிவாணன் ஆகியோர் இத்திறப்புவிழாவில் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, திருச்சியில் 20 இடங்களில் நவீன கண்காணிப்பு கோபுரங்களை நிறுவப்போவதாகவும் அறிவித்திருக்கிறார், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ்.