சிங்கப்பூரின் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னமா ? யார் இந்த லீகுவான்யூ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிங்கப்பூரின் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னமா ? யார் இந்த லீகுவான்யூ?

டெல்டாகாரன்களின் மனங்களை கவர்ந்த மு.க.ஸ்டாலின்!! சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மறைந்த லீகுவான்யூ-வுக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

சிங்கப்பூரின் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னமா ? யார் இந்த லீகுவான்யூ?

லீ குவான் யூ
லீ குவான் யூ

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

1965-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் தனிநாடாக பிரிந்தபோது அதன் முதல் பிரதமராக பதவியேற்றவர்தான் லீகுவான்யூ. சிறிய தீவாக, வெறும் 716 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்ட சிங்கப்பூரை, கட்டுமானம், தொழில்வளர்ச்சி மற்றும் சட்டதிட்டங்கள் வகுப்பது உள்ளிட்ட சவாலான விசயங்களை எதிர்கொண்டு, மிகக்குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் சிங்கப்பூரை நாடாக நிலைநிறுத்தியவர்களுள் முதன்மையானவர் லீகுவான்யூ.

”சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் தமிழ்ப்பெயர் உள்ளது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நூல் வெளியாகி உள்ளது. சர் ஸ்டாம் போர்டு ராபீஸ் காலத்தில் சிங்கப்பூரின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள், சாலைகள், வழிப்பாட்டு இடங்கள் ஆகிவை உருவாக்கத்தில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பங்கு இருந்துள்ளது.” என்று சிங்கப்பூரில் தமிழர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சிங்கப்பூரில் மு.க. ஸ்டாலின்
சிங்கப்பூரில் மு.க. ஸ்டாலின்

பொதுவில் தமிழகம் என்பதை விட, குறிப்பா டெல்டா மாவட்டங்களுக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு உணர்வுப்பூர்வமானது. இன்று வளமான பகுதியாக அறியப்படும், காவிரி டெல்டா பகுதிகளில் 70 – களில் அடுத்தடுத்தாற்போல, பஞ்சம் ஏற்பட்டதாகவும்; நீரின்று, உணவின்றி, வாழ்வாதாரம் இழந்து நின்ற டெல்டா மக்களை கப்பலேற்றி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்ற பெருமையும் லீகுவான்யூ-க்குச் சொந்தமானது.

மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, மேலநத்தம், கீழத் திருப்பாலக்குடி, மேலத்திருப்பாலக்குடி, மகாதேவப்பட்டினம், தெற்குசீதாரம், வடக்குசீதாரம், நெடுவாக்கோட்டை, தளிக்கோட்டை, தஞ்சை மாவட்டம் மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் இன்றளவும் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் வீட்டுக்கு ஒருவர் என்ற நிலை மாறி, இன்று வீட்டுக்கு குறைந்த பட்சம் இருவர் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். பலர், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

கடந்த 2015-இல் லீகுவான்யூ மறைந்த பொழுது, அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மன்னார்குடியில் வைக்கப்பட்ட பதாகையில் இடம்பெற்றிருந்த வாசகம், ‘மண் வீட்டில் வசித்த எங்களை மாடி வீட்டில் வசிக்க வைத்த தெய்வமே!’என்பதாக இருந்தது. இந்த உணர்வுப்பூர்வமான சிறப்பம்சம் காரணமாகவே, லீகுவான்யூக்கு மன்னார்குடியில் சிலையமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

”அவர் மறைந்த 2015 –ஆம் ஆண்டில், அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுதே, லீகுவான்யூக்கு சிலையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலத்தில் அக்கோரிக்கை நிறைவேறியிருப்பதில் பெருமகிழ்ச்சி” என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“டெல்டா மாவட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி உள்ளிட்டு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லை என்ற வருத்தம் டெல்டா காரர்களுக்கு இருந்து வந்தது. நானே டெல்டா மாவட்டத்துக்காரன் என்று சொல்லித்தான் சமாளித்து வந்தார், மு.க.ஸ்டாலின். சமீபத்தில் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்ற டி.ஆர்.பி.ராஜாவிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருவரும் இணைந்து டெல்டா மக்களின் மனங்குளிரும்படி செய்துவிட்டனர்.” என்கிறார், டெல்டா மாவட்டத்துக்காரர் ஒருவர்.

”திருச்சி விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு நான்கு விமானங்கள் சிங்கப்பூருக்கு பறந்து செல்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 4,02661 பேர் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, கோலாலம்பூர், கொழும்பு வழியாக சிங்கப்பூர்  பயணித்தவர்களின் கணக்கையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இருமடங்காகும். இந்திய அளவில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களின் தரவரிசையில் பதினோராவது இடத்திலும்; திருச்சியிலிருந்து அன்றாடம் 37.5% பயணிகள் சிங்கப்பூருக்கு பயணிப்பவர்களாக இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களும் சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் அதிலும் குறிப்பாக, திருச்சிக்கும் இடையிலான உறவை குறிக்க போதுமான சான்று.

trichy Airport
trichy Airport

இன்றும்கூட, திருச்சியிலிருந்து அன்றாடம் 12 டன் காய்கறிகள் விமானம் வழியாக சிங்கப்பூருக்கு சென்றுகொண்டிருக்கிறது.” என்கிறார், விமான நிலையம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் உபயத்துல்லா.

”தமிழ் மொழியில் ஏற்பட்ட எழுத்து சீர்த்திருத்தத்தை முதன்முதலில் ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய நாடு சிங்கப்பூர்தான். சிங்கப்பூரில் தமிழ் நாளிதழ்தான் முதலில் தோன்றியது. சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் உள்ளது. சிங்கப்பூரில் தமிழ் நீக்கமற நிறைந்திருக்க அடிப்படை காரணமாக இருந்த முதல் பிரதமர் லிக்குவான் யூ.” என முதல்வர் சுட்டிகாட்டியிருப்பதை போல, தமிழ்மொழியோடும் நெருங்கிய பிணைப்பைக் கொண்டது, சிங்கப்பூர்.

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி
தமிழ்வேள் கோ.சாரங்கபாணி

சிங்கப்பூரில், தமிழ் வளர்ச்சியில் சீர்த்திருத்த சங்கத்தை தொடங்கிய தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்களும்; சிங்கப்பூரில் 12 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக பணியாற்றி மறைந்த எஸ்.ஆர்.நாதனும் குறிப்பிடத் தகுந்தவர்கள். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் சிங்கப்பூர் தமிழர்களிடத்தே நேர்தோன்றி உரையாற்ற பாலமாக இருந்தவர்களும் இவர்கள்தான்.

எஸ்.ஆர்.நாதன்
எஸ்.ஆர்.நாதன்

மன்னார்குடியில், சிலைமட்டுமல்ல; அவர் நினைவாக நூலகமும் அமையும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அடுத்தாண்டு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழகத்தில் தொழில்தொடங்குவதற்காக, முதலீட்டாளர்களை கவர்வதற்காக சென்றவர், அங்கிருந்தபடியே தமிழக மக்களின்

மனங்களை கவர்ந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

-டெல்டாக்காரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.