முன்னாள் முதல்வருக்கு தமிழர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் !
முன்னாள் முதல்வருக்கு தமிழர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பிறந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் எல்லை அருகே உள்ள நாரவாரிபள்ளிக்கு வந்திருந்தபோது, தமிழர்களும் ஒன்று கூடி அவருக்கு அளித்த வரவேற்பு அரசியல் வட்டாரத்தில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வழிபாடு செய்துவிட்டு சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அப்படியே தனது பூர்வீக கிராமத்திற்கு வருகை புரிந்தார்.
இரு மாநில எல்லையான மல்லானூர் பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு கொத்தூர் சுங்கச்சாவடியின் வழியாக பெங்களூருக்கு செல்லும் வழியில் பச்சூர் பகுதியில் அவரது ஆதரவாளர்களான தமிழர்களும் ஒன்று கூடி மலர்தூவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றதோடு கிரீடத்தையும் அணிவித்து மகிழ்வித்தார்கள்.
“இதுபோன்ற வரவேற்புகள் நமது தமிழ்நாட்டில் நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. எனக்கே பிரமிப்பாக உள்ளது” என மக்கள் வெள்ளத்தினூடாக மகிழ்ச்சி பொங்க பேசினார் சந்திரபாபு நாயுடு.
மணிகண்டன்.