தலையை வெட்டி வீதியில் வீசிய ரவுடிகள் : ஓசூரை உறைய வைத்த இரட்டைக்கொலையில் 5 ரவுடிகள் கைது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தலையை வெட்டி வீதியில் வீசிய ரவுடிகள் : ஓசூரை உறையவைத்த இரட்டைக்கொலையில் 5 ரவுடிகள் கைது !

ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரவுடி பக்கா பிரகாஷின், தொழில் கூட்டாளிகளான ஓசூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்த பர்கத் மற்றும் ஓசூர் பழைய வசந்த் நகரைச் சேர்ந்த பொன்வண்ணன் (எ) சிவா ஆகியோர் மீது கடந்த டிச-19 அன்று இரவு 15 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், ரவுடிகள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் (எ) சிவா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஓசூர் இரட்டை கொலை
ஓசூர் இரட்டை கொலை

நீங்கள் வேலை பெறுவது எளிது...

சேலம் மத்திய சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த பிரகாஷை அவனது வீட்டில் இறக்கிவிட்டு தெருவில் நடந்து சென்றபோது, இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலிலிருந்து தப்பிய ரவுடி பக்கா பிரகாஷ் நேராக ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்து உயிர் தப்பியுள்ளான்.

3

சினிமா காட்சியை விஞ்சும் வகையில், பொன்வண்ணன் (எ) சிவா வின் தலையை தனியே துண்டித்து வீசிய கும்பல், உயிருக்குப்பயந்து நண்பன் பக்கா பிரகாஷ் வீட்டினுள் தஞ்சமடைந்த நிலையில், வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அவனை வெட்டி சாய்த்திருக்கிறது, ஆத்திரம் கொண்ட ரவுடி கும்பல்.

சரண்டரான 2 கொலையாளிகள் நவாஸ் மற்றும் அமித்
சரண்டரான 2 கொலையாளிகள் நவாஸ் மற்றும் அமித்
4

ஓசூர் போலீசில் தஞ்சமடைந்த ரவுடி பக்கா பிரகாஷ் அளித்த தகவலின் பேரில், முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த நாகராஜ், ராம்நகரை சேர்ந்த நவாஸ், சாந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா மற்றும் கூச்சன் உள்ளிட்டு கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட 15 பேர் கொண்ட கும்பலை, ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் உத்தரவின் பேரில் ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

கன்ஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவன் மட்டும் போலீசில் சிக்கிய நிலையில், டிச-30 அன்று ஓசூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ், சீதாராம்மேடு பகுதியைச் சேர்ந்த ஹமித் ஆகிய இருவரும் பாலக்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இரட்டை கொலை வழக்கில் போலீஸிடம் தஞ்சம் அடைந்த முனிராஜ்
இரட்டை கொலை வழக்கில் போலீஸிடம் தஞ்சம் அடைந்த முனிராஜ்

இதனைத் தொடர்ந்து, ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த முபாரக் , சானசந்திரம் ஆரிப் மற்றும் ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்த நிஜாம் ஆகியோரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இடையூறாகவும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற ரவுடிகளை கண்காணித்து கடுமையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

– மணிகண்டன்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.