அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

35 நாட்களில் நிறைவடைந்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்  நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது  !!

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் ஒரே கட்டமாக  சென்னை மற்றும் திருச்சியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, ‘லவ்வர்’,  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசை ஷான் ரோல்டன்,  ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு , சுரேஷ் குமார் எடிட்டிங், ராஜ்கமல் கலை இயக்கம், உடை வடிவமைப்பு: ப்ரியா ரவி.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கியுள்ளது . விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்,  பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

 

  —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.