‘ஒரு விரல் புரட்சியில்’ விஜய் ‘துப்பாக்கி’எதிரியை சுடுமா? அல்லது !
ஆனால் box office hit
ஆகிவிடக்கூடாது.
சில யுக்திகள் இருப்பதாகத்
தோன்றுகிறது.
பெரியார் – கடவுள் = அண்ணா
ஏற்கிறார்.
ஏறக்குறைய திமுக பாணி.
அதிகாரத்தில் பங்கு =
ஆட்சியில் வாய்ப்பு.
இப்போதுள்ள திமுக அணியில்
பொருமல் அதிகம்.
அவர்கள் அணிமாற வசதியாக
அதே கொள்கைகள்.
2026 வரை அவகாசம்.
விஜயும் திமுக கூட்டணிக் கட்சிகளும் சூழலை எடைபோட.
மதச்சார்பற்ற என்ற வார்த்தை
கம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்கும்.
ஆக, திமுகவுக்கு check point
ரெடி.
BJP, தனக்கு எதிரான வாக்குகளை இனி திமுக மட்டும்
அனுபவிக்கமுடியாமல், அதை
பிரித்துமேய ஒரு goat யை
கண்டுபிடித்துள்ளது.
AIDMK கூட major share
கிடைத்தால் அவரோடு போகக்கூடும். சசிகலாவோடு
சமரசம் செய்வதைவிட இது
எடப்பாடிக்கு கௌரவமான surrender.
ராமதாஸுக்கு no problem.
முதிய வன்னியர் வாக்கு வழக்கம்போல்.
சீமான்க்கு 25 ல் வரும் அதுவே
30 ல் போகும்.
‘ஒரு விரல் புரட்சியில்’ விஜய்
‘துப்பாக்கி’எதிரியை சுடுமா?
அல்லது தன்னையே…
– கவிஞர் நந்தலாலா