அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுகவுடன் கூட்டணி அமைத்த எம்.ஜி.ஆர். அதிமுக !

காலப் பெட்டகம் – 11

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2001

தமிழ்நாட்டின் 12ஆவது  சட்டமன்றத் தேர்தல் 2001 ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாள் நடைபெற்றது. மே 13ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக கூட்டணி 196 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 132 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

1996 – 2001ஆம் ஆண்டு வரை திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது இரு வழக்குகள் தொடரப்பட்டன.

  1. அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் சொத்துக்களை சந்தை மதிப்பைவிட குறைவாக அரசு பொறுப்பில் உள்ள ஜெயலலிதா வாங்கியுள்ளார். இது சட்டத்தை மீறிய செயல் என்பதாகும்.
  2. கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே (Pleasant Stay) விடுதிiயத் தனியார் நிறுனம் கட்டியது. மலைப்பிரதேச கட்டிட விதிகளின்படி இரண்டு தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி இருந்தது. ஆனால், அப்போதைய அரசு விதிகளில் தளர்வு செய்து, அந்த விடுதி 7 தளங்கள் கட்ட அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

யாவரும் கேளீர்

டான்சி வழக்கில் 2000-ஆம் ஆண்டில் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதன் காரணமாகவே அவர் 2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. பிளசன்ட் ஸ்டே வழக்கில் 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதியின் அடிப்படையில் 2001ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என  மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதி குறிப்பிடுகின்றது. இதனால் ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. மக்களிடம் ஜெயலலிதா மீது அனுதாபம் ஏற்பட வழிவகை செய்தது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

காலப் பெட்டகம் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, சிபிஐ, சிபிஎம், மூப்பனார் தலைமையிலான தமாக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. திமுக கூட்டணியில் பாஜக, சு. திருநாவுக்கரசரின் எம்ஜிஆர் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மதிமுக மற்றும் பார்வார்ட் பிளாக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 2001 மே 13 ஆம் நாள் மாலை அதிமுக ஆட்சி அமைப்பதற்காக அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுவிட்டது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அதே நாளில் மாலையே தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் பாத்திமா பீவீ பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. செப்டம்பர் மாதம் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றது செல்லாது என்றும், பதவிப் பிராமணம் செய்துவைத்த ஆளுநரின் செயல்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவி இழந்தார். ஆளுநர் பதவி விலகினார்.

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். 2001ஆம் ஆண்டில் டான்சி வழக்கு மற்றும் கொடைக்கனால் பிளஸ்ன்டே விடுதி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுக்கப்பட்டார். பின்னர் 2002ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 3ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். (ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது)

இதனை தொடர்ந்து அமைந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், தற்போது திமுகவில் இணைந்துவிட்ட

ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், நயினார் நாகேந்திரன், கே. ஏ. செங்கோட்டையன், சைதை துரைசாமி, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்  உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

–              ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.