மதிப்புமிகு அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுக காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு நடைமுறை படுத்தாமல், பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்தும் யுக்தி எனவே ஒன்றிய பாஜக அரசு போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு காவிரியில் தமிழ் நாட்டின் பங்கை திறந்து விட்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்.
காவிரியில் பாரம்பரியமாக தமிழ் நாடு அனுபவித்து வரும் நீர் உரிமையை மறுத்து ஏற்கெனவே ஒத்துக் கொண்ட ஒப்பந்தங்களை மீறி கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்ற தீர்ப்பையும் நடுவர் மன்ற உத்தரவை மதிக்காமல்,சட்டவிரோதமாக தடுப்பனைகளைக் கட்டி பயிர் பாசனப் பறப்பையும் குடிநீர் எல்லையையும் விஸ்தரிப்பு செய்து கொண்டது கர்நாடக மாநிலம்.
இயற்கையின் விதி நதியானது பள்ளத்தை நோக்கி ஓடி கடலில் கலந்திட வேண்டும் ஆனால் ஆற்றுநீர் கீழ்நோக்கி வரமுடியாமல் தடுப்பனைகளைக் கட்டி தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது கர்நாடக மாநிலம்.
ஒப்பந்தங்கள்,
காவிரியில் தமிழ்நாட்டின் பங்கைப் பெறுவதற்கு சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம், மீண்டும் 1924 ஆம் ஆண்டு மற்றோரு ஒப்பந்தம், 1974 ஆம் ஆண்டிலிருந்து நடுவர் மன்றம் அமைக்க கோரி 16 ஆண்டுகள் போராடியதன் விளைவாக 1990 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது 1990 இல் இருந்து நடுவர் மன்றத் தீர்ப்பிற்க்காக 17 ஆண்டுகள் போராடி 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தின் தீர்ப்பு கிடைத்து மத்திய அரசிதழில் போராடி பெற்ற உரிமையே காவிரி நீர்.
காவிரி ஆறு தமிழ்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் ஆறுகளை நம்பித்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பரப்பளவு 44 – 016 சதுர கிலோமீட்டர் 50 லட்சத்து 88 ஆயிரம் ஏக்கர் கர்நாடகாவின் காவிரி வடிநிலப் பரப்பளவு 34 – 273 சதுர கிலோமீட்டர் 41 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர், காவிரி ஆறு குடகு மலையில் தொடங்கி பூம்புகார் வரை பயணிக்கும் தூரம் 800 கிமீ தமிழ்நாட்டில் 416 கிமீ தூரமும் கர்நாடகாவில் 320 கிமீ தூரமும் இருமாநில எல்லை 64 கிமீ .
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர்களாக வீரேந்திர பாட்டில் தேவராஜ் அர்ஸ், குண்டுராவ் பங்காரப்பா,ராமகிருஷ்ணா ஹெக்டே, எஸ் ஆர் பொம்மை, தேவகவுடா , ஜெ எச் பாட்டில், எஸ் எம் கிருஷ்ணா, வீரப்பமொய்லி,குமாரசாமி , எடியூரப்பா, சதாணந்த கவுடா, சீத்தரமையா, சிவக்குமார் என்று அத்தனை முதலமைச்சர்களும் பாடும் ஒரே பல்லவி காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுக் கூடத் தரமாட்டோம் என்பதே அவர்களின் அரசியல் தாரகமந்திரம்.
தங்கள் மாநிலத்தின் வழியாக பாயும் காவிரித் தண்ணீரை தமிழ் நாட்டிற்கு விடமாட்டோம் என்று கர்நாடக மாநிலம் தொடர்ந்து சொல்லுமேயானல் அதை ஒன்றிய அரசு கண்டிக்கத் தவறுமேயானால் இந்திய என்ற கட்டமைப்பு சிதையும் தமிழ்நாட்டில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் எங்களுக்கே சொந்தம் அதில் உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய தொகுப்பிற்கு அனுப்ப முடியாது ஆவடி இராணுவ தளவாட தொழிற்சாலையில் உற்பத்தியாகும் இயந்திர துப்பாக்கிகள், கனரக வாகனங்கள், டாங்கிகள், பெரம்பூர் இரயில் பெட்டிகள் , கல்பாக்கம்,கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு எதிர்காலத்தில் தமிழ் நாட்டுடன் ஒப்பந்தம் போடவேண்டிய நிலை வரும் என்பதை எச்சரிக்கின்றேன்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் ஆறுகளின் நதிநீர் தவாக்கல் சிக்கல் சுமுகமாக பேசி பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாபிற்கும் அரியானா விற்கும் இடையே சட்லஜ் நதி, ராஜஸ்தானுக்கும் அரியானா விற்கும் இடையே ரவிபியாஸ் ஆறு, மகாராஷ்டிரா விற்கும் இந்தியாவிற்கும் இடையே கோதாவரி ஆறு, குஜராத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் இடையே நர்மதா அணை, புத்தர் சாக்கியர்களுக்கும் கோலியருக்கும் இடையே ரோகிணி ஆறு பிரச்சினை, புத்தன் துறவறம் புண காரணமாக இருந்தது. இதனால் நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு கோசல நாட்டின் தலைமையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது,ரோகிணி ஆற்று நீர் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதுவே சர்வதேச அளவிலான இன் சிங் ஒப்பந்தமானது.
சர்வதேச அளவில் இன் சிங் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதி,
இந்தியா பாகிஸ்தான் இடையே ரவிபியாஸ் ஆறு,
இந்தியா பங்களாதேஷ் இடையே கங்கை நதி
எகிப்திற்கும் சூடானுக்கும் இடையே நைல் நதி,
எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சூயஸ் கால்வாய்,
சிரியா இஸ்ரேலுக்கு இடையே பனியாஸ் டான்நதி,
அமெரிக்க கனடா நாட்டிற்கு இடையே கொளம்பிய ஆறு,
பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே ரைன் நதி,
ஆஸ்திரியா துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளுக்கு இடையே 2880 கிலோமீட்டர் பாயும் டான்யுப் நதி சிக்கல் சுமுகமாக பேசி பயன்படுத்தி வருகின்றனர், ஆனால் இந்தியாவின் தமிழ்நாடு கடைமடை மாநிலமாக இருப்பதால் தலைமடை மாநிலங்கள் காவிரியில் கர்நாடகவும் பாலாற்றில் ஆந்திரவும்,முல்லைப் பெரியாற்றில் கேரளாவும் அடாவடி செய்வதும் பெருமழைக் காலங்களில் வெளியேறி உயிர்களுக்கும் பயிர்களுக்கும் சேதத்தை விளைவிக்கும் உபரி நீரை பெறும் மாநிலமாக சகோதர மாநிலங்கள் நினைக்கின்றது.
நாம் கேட்பது பிச்சை அல்ல உரிமை என்பதை நிலைநாட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அணைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி ஒன்றி பாஜக அரசிற்கு நமது ஒற்றுமையை வலிமையை தெரிவித்திட வேண்டும்.
காவிரி நீர் உரிமைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் 03/08/2026 திங்கட்கிழமை அன்று நடைபெறும் போராட்டத்திற்கு திராவிட வெற்றிக் கழகத்தின் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்…
மல்லை சி ஏ சத்யா, தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.