ஸ்ட்ரைக்குனா இதுதாண்டா ஸ்ட்ரைக்கு..!!
வங்கி ஊழியர் சங்கங்கள் அனைத்தும் இணைந்து 28–30/செப். 3 நாட்கள் வேலைநிறுத்தம் என்று அறிவித்தனர்.
ஒரு ஸ்ட்ரைக் என்றால் சாதாரண விஷயம் அல்ல. நினைத்த பொழுதெல்லாம் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து விட முடியாது.
ஊழியர்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
அவர்கள் கேட்கும் கேள்விகள், எழுப்பும் பிரச்சனைகள் ஏராளம். தலைமை பதில் சொல்ல ததிங்கினதோம் போடும்.
சங்கம் அறிவித்து விட்டால் உறுப்பினர்கள் அப்போதுதான் அக்கறையாய் பணிக்கு செல்வார்கள் சிலர்.
நீ அறிவித்து விட்டாயா? அதற்காகவே நான் வேலைக்கு போறேன் என்பார்கள் சிலர்.
நிர்வாகத்தின் குட்புக்ஸ்ல் இருக்க இதுவே நல்வாய்ப்பு நான் வேலைக்கு முதல் நாளிரவே வந்து விடுகிறேன் என்னும் கூட்டமும் உண்டு.
நமக்கேன் வம்பு என்று நடுநிலையாய் ஓரம் கட்டுவோர் சிலர்.
நான் இன்னும் ரெகுலர் ஆகவில்லை.. பணி உறுதி பெறவில்லை.. எனக்கு பதவி உயர்வு வரும் நேரம் என்று சங்கத் தலைமையிடம் வந்து சொல்லி அவர்களையும் பகைத்துக் கொள்ளாத சங்க ஆர்வலர்கள் ஒருபகுதி.
வேலை நிறுத்தம் செய்து விட்டு, மறுநாள் வந்து கையெழுத்து போட்டு சமத்துவம் காட்டுவார்கள் சிலர்..
க்கும்.. அப்டியே கோரிக்கை நிறைவேறப் போகுதாக்கும் என்று அலுத்துக் கொள்வோர் சிலர்..
டேய் நிர்வாகமே ஆர்டர் போடறதா இருக்காங்க.
அத தெரிஞ்சுகிட்டு, இவங்களாலதான் நிறைவேறிச்சி என்று காட்டுவதற்காக இவனுங்க ஸ்ட்ரைக் அறிவிச்சிட்டானுங்கடா என்று பழம் தின்னு கொட்டை போடும் கூட்டம் ஒரு பகுதி.
இப்படி அனாச்சாரங்கள் ஏராளம் இன்னும் அடுக்கலாம். இதையெல்லாம் ஒருங்கிணைத்து வேலைநிறுத்தம் அறிவிப்பதும் அதை நடத்துவதும் நடந்த பின் விளைவுகளை எதிர் கொள்வதும் சங்கத் தலைமைகளுக்கு இமாலயன் டாஸ்க்.
இவ்வளவு சேட்டைகளும் செய்வோர், போராட்டத்தால் கோரிக்கை நிறைவேறி ஆணை வெளி வந்ததும்…
அந்த பலனை விரைந்து பெற முண்டியடித்து வாங்கிக் கொண்டு சங்கத் தலைமையிடமே வந்து, வாங்கிட்டன் பாஸ், நீங்க
வாங்கியிருக்க மாட்டிங்களே, இன்னா சங்கம் வச்சிருக்கிங்களோ என் நக்கலடிப்பார்கள் பாருங்கள், கிளாஸ்..
இப்படி நாம் ஏராளமான அனுபவங்களைக் கேள்விபட்டிருப்போம்.
ஆனால், வங்கி ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் என்று அறிவித்தன.
ஒன்றிய அரசு அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் செய்தி சொல்கிறது.. மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது..
முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
அதைவிட டாப் செய்தி.. இந்தியா முழுக்க அரசு ஊழியர்கள்,ஓய்வூதியர்கள் அனைவருக்கும் சம்பளத்தை ஐந்து நாட்கள் முன் கூட்டியே அதாவது 25செப் அன்றே வழங்கி விட்டது. அதாவது இன்றே கிடைத்தது விடடது. எனக்கு ஓய்வூதியம் வந்து விட்டது. அதன் விளைவே இந்த நீண்ட பதிவு.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், சங்கங்களுக்கு ஜிந்தாபாத்.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர்க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.