வீர வசனம் தேவையில்லை ! உண்மை இதுதான் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெம் கிராணைட் வீரமணி தொடர்பான பாலியல் வழக்குகள் திமுக ஆட்சிக் காலத்தில் முடித்து வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. தங்களது கடமையை முறையாகச் செய்யத் தவறிய எந்த காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த சர்ச்சைக்குரிய காவல்துறை அறிக்கை 20.2.2026 அன்று குற்றவியல் நடுவர் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் ஆதாரங்கள் அல்லது தகவல்கள் கிடைத்தால், மீண்டும் குற்றவியல் நடுவரை அணுகுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

jam veeramani caseஇருப்பினும், 2026  மே மாதம்  முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து உள்துறையை தன் வசம் வைத்திருக்கும் ச.ஜோசப் விஜய் அவர்கள், ஜூன் 18,2026 வரை அந்தச் சர்ச்சைக்குரிய காவல் துறை அறிக்கையைத் திரும்பப் பெறவோ அல்லது மேல் விசாரணைக்காக மனுத் தாக்கல் செய்யவோ இல்லை. ஏன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே?

ஜூன் 19, 2026 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை முடித்துவைக்க வாதிட்டது உங்களுடைய அரசுத்தரப்பு வழக்கறிஞர்தான். ஆனால், உங்கள் அரசு வழக்கறிஞரின் வாதங்களை போக்சோ நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், அடுத்த நான்கு வாரங்களுக்குள் மேல் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது போக்சோ நீதிமன்ற நீதிபதிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால், அதற்கான பெருமையைத் தாங்கள் எடுத்துக்கொள்ளவோ, அல்லது இதனை வைத்து அரசியல் செய்யவோ வேண்டாம்.. ஏனெனில், நீங்கள் இந்த வழக்கில் எந்த குறிப்பிடத்தகுந்த நடவடிக்கையையும்  மேற்கொள்ளவில்லை!

jam veeramani caseபாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரது கருத்தும் – விருப்பமும் ஆகும். எனவே இந்த விவகாரத்தில் உங்களின் வீர வசனம் எதுவும் தேவையில்லை!

jam veeramani case( போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இணையப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 19.06.2026 தேதியிட்டதாகும். ஆனால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிரதியில், உத்தரவின் தேதி தவறுதலாக 19.10.2026 என தட்டச்சுப் பிழையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தட்டச்சுப் பிழையைத் தெளிவுபடுத்தும் வகையில், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட  உத்தரவின் முழுப் பிரதியையும், சரியான தேதி 19.06.2026 எனக் காட்டும் இணையப் பிரதியையும் இணைத்துள்ளேன். )

—   பி.வில்சன், எம்.பி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.