அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனி ஏழாவது தெருவில் வசித்து வந்தவர் ஜெயந்தி (36) இவரது கணவர் விஜயன் இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெயந்தி கணவனை பிரிந்து மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இவர் அதிமுகவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனது மூத்த மகள் ஷாலினி, இளைய மகள் கிருஷ்மிளா ஆகியோருடன் இருந்த பொழுது இளைய மகள் கிருஷ்மிளா தலை முடிக்கு கலரிங் செய்து உள்ளார் இதனை ஜெயந்தி கண்டித்துள்ளார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதனால் கோபமான இளைய மகள் கிருஷ்மிளா வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை தள்ளி விட்டு உள்ளார். இதில் மனம் உடைந்த ஜெயந்தி  கதவை சாத்திக்கொண்டு  வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தனது சுடிதாரின் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கியவர் உயிருக்கு போராடியபடி கத்தி உள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஜெயந்தி
ஜெயந்தி

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சத்தம் கேட்டு மகள்கள் இருவரும் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மா ஜெயந்தி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அலறி துடித்த மகள்கள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தூக்கில் தொங்கிய ஜெயந்தியை இறக்கி அருகிலுள்ள நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட சிகிச்சை செய்து பின்னர் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மூத்த மகள் ஷாலினி(18) நவல்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறந்து போனவர் அதிமுகவின் மாவட்ட நிர்வாகி பொறுப்பு வகித்து வந்ததால் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் கடிதம் வெளியிட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிமுகவினரிடத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.