அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அதிமுகவில் அடிதடிதி, திருச்சியில் பரபரப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அதிமுகவில் அடிதடிதி, திருச்சியில் பரபரப்பு

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. அப்போது மண்டபத்திற்குள் மஞ்சள் நிறக்கொடியுடன் புகுந்த 30 பேர் திடீரென மேடையை நோக்கி சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த சேர்களை எடுத்து அடிக்க ஆரம்பித்தினர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதனால் கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்தனர். அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி வந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் தகறாறு செய்தவர்கள் வெளியேறியப்பின்னர் கூட்டம் நடந்தது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது,.. அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பதவியை மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகறாறு செய்தனர். மேலும் முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.