தலைவனுக்கு வந்த சோதனை ! திருப்பத்தூர் அதிமுகவினர் செய்த அலப்பறை !
தலைவனுக்கு வந்த சோதனை ! திருப்பத்தூர் அதிமுகவினர் செய்த அலப்பறை!
ஜனவரி-17, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள கீழ்மிட்டாளம் பகுதி அதிமுகவினர் சார்பில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக, நடிகர் அரவிந்த்சாமியின் படம் இடம்பெற்றிருந்ததுதான் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, “தலைவி” என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியிருந்தது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும்; எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தைத்தான் எம்.ஜி.ஆர். என்பதாக கருதி பகுதி தொண்டர்கள் பேணர் அடித்து வைத்துள்ளனர்.
இணையத்தில், இந்த தகவல் தீயாக பரவ. பலரும் கழுவி ஊற்ற. உடனடியாக, எம்.ஜி.ஆரின் உண்மை படத்தை அதன் மேலே ஒட்டி பேட்ஜ் ஒர்க் பார்த்துவிட்டனர் பகுதி அதிமுகவினர்.
தலைவன் படத்துக்கும் தலைவனாக திரைப்படம் ஒன்றில் நடித்த நடிகனுக்கும் கூடவா, வித்தியாசம் தெரியாமல் போனது என தலையிலடித்துக் கொண்டார்களாம் போஸ்டரை பார்த்த தலைவரின் ரசிகர்கள்!
-மணிகண்டன்.