மிளகாய்த்தூளை கரைச்சி குடிக்க வச்சு….நெஞ்சை உலுக்கும் கொடூரம் ! சிக்கலில் எம்எ.ல்.ஏ. குடும்பம் ! இளம் பெண் வீடியோ வாக்குமூலம் !

0

மிளகாய்த்தூளை கரைச்சி குடிக்க வைத்து … வீட்டு வேலைக்கு போன இடத்தில் இளம்பெண் நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம் !

அந்த இளம் பெண்
அந்த இளம் பெண்

https://businesstrichy.com/the-royal-mahal/

“மிளகாய்த்தூளை கரைச்சி குடிக்க வைப்பாய்ங்க. குடிச்ச உடனேயே குடலெல்லாம் எரியும். வலி தாங்க முடியாம அலறுவேன். அப்பவும் குடிக்க தண்ணிக்கூட கொடுக்க மாட்டாங்க…”

”நியூஸ்பேப்பரை எரிச்சி வாய்கிட்ட வச்சி காட்டுனாங்க. வாய் வெந்து துடிச்சாலும் கண்டுக்க மாட்டாங்க.”

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

”குழம்பு கரண்டி, துடப்பக்கட்டைனு எது  கையில் கிடைக்கிதோ அத கொண்டு அடிப்பாங்க. உடம்புல ஒரு இடம் பாக்கி வைக்காம அடிப்பாங்க. கையை தூக்க சொல்லி நெஞ்சிலேயே அடிப்பாங்க…”

”வலி தாங்க மாட்டாம அழுவேன். காலை பிடித்து கெஞ்சுவேன். கையெடுத்துக் கும்பிட்டாலும் இரக்கப்பட மாட்டாங்க. இரத்தம் வழிஞ்சா கூட ஆஸ்பத்திரிக்கும் கூட்டிட்டு போக மாட்டாங்க. மஞ்சத்தூளும் கொஞ்சம் ஐஸ்கட்டியும்தான் தருவாங்க.”

வெறும் பதினெட்டே வயதான ரேகா-வின் வாக்குமூலங்கள் இவை. கடல்கடந்து அரபு நாட்டில் ஷேக்குகளிடம் வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் சிக்கிக்கொண்ட பணிப்பெண் ஒருவரது புலம்பல் வார்த்தைகள் அல்ல இவை!

தமிழகத்தில், தமிழகத்தின் தலைநகரத்தில் கோலப்பாக்கத்தில் நடந்த கொடூரம் இது. பல்லாவரம் தொகுதியின் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான இ.கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் என்வர் வீட்டில் தங்கி பணிப்பெண்ணாக வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில்தான், இத்தகைய சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார், ரேகா. மனித தன்மையற்ற முறையிலும் காட்டுமிராண்டித்தனமாகவும் ரேகாவை நடத்தியது, எம்.எல்.ஏ.வின் மருமகள் மார்லினா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு  கிராமத்தைச் சேர்ந்தவர்  18வயது இளம் பெண். மும்பைக்கு வேலைக்குப் போவதாக சொல்லி நான்காண்டுகளுக்கு முன்பாக கிளம்பிய தந்தை செல்வம் இன்று வரை வீடு திரும்பாத நிலையில், தாயார் செல்வியின் ஒற்றை வருமானத்தில்தான் மொத்தக் குடும்பமும் உயிர்வாழ்ந்திருக்கிறது.

அந்த இளம் பெண்..
அந்த இளம் பெண்..

12-ஆம் வகுப்பை நிறைவு செய்த அந்த இளம் பெண் , உடல் நோக வீட்டு வேலை செய்து கஷ்டப்படும் அம்மாவுக்கு மேலும் சிரமத்தை கொடுக்கக்கூடாது; நாமும் வீட்டு வேலை செய்தாவது கொஞ்சம் பணத்தை சேமித்து கல்லூரியில் சேர வேண்டும் என்று எண்ணியிருக்கிறார்.

புரோக்கர் ஒருவர் வழியாக, அந்த இளம் பெண் வந்து சேர்ந்தது எம்.எல்.ஏ. கருணாநிதியின் மருமகள் மார்லினா வீட்டிற்கு. காலை 6.30 மணி தொடங்கி, நள்ளிரவு தாண்டியும் 1.30 வரை நீளும் அன்றாடப் பணிகள். வாசல் கூட்டுவது தொடங்கி, மூன்று வேளை உணவு தயாரிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டிற்கு மாப் போடுவது, கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்வது, கக்கூஸ் கழுவுவது என சகல வேலைகளையும் அந்த இளம் பெண் ஒருவர்தான் பார்த்துக் கொண்டாக வேண்டுமாம்.

வெறும் 18 வயதேயான சிறுமி. இதுபோன்ற வேலைகளில் பரிட்சயம் இல்லாதவர். அதுவும் நாளொன்றுக்கு இயந்திரம் போல, 18 மணிநேரம் இடையறாது வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் கனவிலும் நினைத்து பார்த்திராத ஒன்று. ஆனாலும், குடும்ப சூழல் கருதி சகித்துக்கொண்டு செய்திருக்கிறார், அந்த இளம் பெண் .

”ஏன் பாத்திரத்தை ஒழுங்காக கழுவவில்லை. ஏன் ஒழுங்காக மாப் போடவில்லை. ஏன் உரிய நேரத்திற்குள் இந்த வேலையை முடிக்கவில்லை.” என்று செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நொட்டம் சொல்லி, சித்திரவதைகளை ஏவத் தொடங்கியபோதுதான், “எனக்கு இந்த வேலை பிடிக்கலை. என்னால செய்ய முடியலை. நான் வீட்டுக்குப் போகிறேன். அனுப்பிவிடுங்கள்.” என்று கெஞ்சியிருக்கிறார், அந்த இளம் பெண்.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

“இது என்ன சத்திரமா? ஆறு மாசம் வேலை செய்திட்டுதான் போகனும். அப்படித்தான் அக்ரிமெண்ட் போட்டிருக்கு”னு மிரட்டியிருக்கிறார், மார்லினா. ஏப்ரல் – 2023 தொடங்கி ஏறத்தாழ பத்து மாதங்களாக வீட்டுச்சிறையில் அடைபட்டுக் கிடந்திருக்கிறார், அந்த இளம் பெண்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“அம்மாவிடம் பேச முடியாதபடிக்கு போனை பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு வார்த்தை சொன்னா போதும் உங்க அம்மாவை ஜெயில்ல பிடிச்சு போட்ருவாங்க. உன் தம்பிய லாரி ஏற்றி கொன்னுடுவோம். ஏன்னு கேக்க நாதியில்லாத நாயி நீனு. உன்னை நம்பி உன் படிப்புக்குனு ரெண்டு லட்சம் கட்டியிருக்கேன்.

அத யாரு கடன் அடைப்பா? நீயும் உங்க அம்மாவும் ரெட்லைட் ஏரியாவுக்குப் போங்க. வேற தொழில் செஞ்சி என் கடன அடைச்சிட்டு போங்க.”னு மெர்லினா ஆபாசமாகவும், பணக்காரத் திமிரிலும், அரசியல்வாதி வீட்டு மருமகள் என்ற ஆணவத்திலும் பேசியிருக்கிறார்.

“அம்மாவுக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடாதுனு தான். இந்த வேலைக்கே வந்தேன். வந்த இடத்திலும் முடிஞ்ச அளவு சகிச்சிட்டுதான் போனேன். என்னையும் எங்க அம்மாவையும் அவ்வளவு அசிங்கமா பேசினாங்க. தீபாவளி பொங்கல்னு விசேசத்துக்குக்கூட வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க. சென்னையில இருக்கோம்னு சொன்னா, எங்கே அம்மா வந்து பார்த்திட போறாங்க.

உடம்புல இருக்க காயத்தை பார்த்திட போறாங்கனு. பெங்களூர்ல இருக்கோம்னு சொல்லிடுவாங்க. இப்படியே ஆறு  மாசமா புள்ளைய பார்க்க முடியலயேனு, எங்க அம்மா ரொம்ப அழுத்திக் கேட்கவும்தான், வக்கீல் ஒருத்தர வச்சி ரெண்டு லட்சம் ரூபா காலேஜிக்கு கட்டியிருக்கேனு எழுதி வாங்கிட்டுதான் என்னய வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க.”

“ஒருவாட்டி, டிரஸ்ஸ கழட்டிட்டு வெளியே போடினு சொன்னாங்க. இப்படியே உன்னை வெளிய அனுப்பினா எவன் வந்து கேட்பான்? எம்.எல்.ஏ. வீடுனு சொன்னா பொத்திகிட்டு போவானுவ. நீயே ஒன்னும் இல்லாத நாயி.”னு சொல்லியே அடிச்சிருக்காங்க, கேட்க நாதியில்லைனு தெரிஞ்சிகிட்டுதான் இவ்வளவும் செஞ்சாங்க.” என்கிறார், அந்த இளம் பெண்.

எவிடன்ஸ் அமைப்பு களப்பணியாளர்கள் வழியே, அந்த இளம் பெண்ணுக்கு  நடந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்,அந்த இளம் பெண்.

உளுந்தூர்பேட்டை போலீசார் வழியாக, திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

அங்குசம் சார்பில் எவிடன்ஸ் கதிரிடம் பேசினோம், “சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். போலீசு தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிடுவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள்.” என்கிறார்.

பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதியிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “எனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மகன் திருமணம் முடித்து கடந்த 5 வருடமாக தனியாகத்தான் வசித்து வருகிறார். அவர் வீட்டில் என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இதில் என்னையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடுவது வேதனையாக இருக்கிறது. அடுத்து இதுவரை அந்தப் பெண் எந்த போலீசிலும் புகாரே கொடுக்காத நிலையில், இந்த விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசுவது எந்தவகையிலும் நியாயமில்லை.” என்கிறார் அவர்.

MLA_கருணாநிதி
MLA_கருணாநிதி

வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில், பட்டியலின சாதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் மனிதாபமானமற்ற முறையில் தொடர் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார் என்பதுதான் நம் கவனத்திற்குரியது; கண்டனத்திற்குரியது. அந்தப் பெண்ணை சித்திரவதை செய்ததாக சர்ச்சைக்குள் சிக்கியிருக்கும் மெர்லினா, எம்.எல்.ஏ. கருணாநிதியின் மருமகள் என்ற அடையாளத்தை காட்டி, இந்த விவகாரத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட மாடல் ஆட்சியின் இலட்சணம் என்பதாகவும் சமூக ஊடகங்களில் தங்களது உள்நோக்கத்திற்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வதும் கண்டிக்கத்தக்கதுதான்.

வீடியோ லிங்

திமுக எம்.எல்.ஏ. வீட்டில் மட்டுமில்லை; போலீசு உயர் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என மேட்டுக்குடியினரின் வீட்டிலும் அந்த இளம் பெண் போன்ற பணிப்பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குறிப்பான இந்த விவகாரத்தில், எந்தவிதமான அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி, எம்.எல்.ஏ. குடும்பத்தினர் உள்ளிட்டு தொடர்புடைய அனைவரையும் போலீசார் முறைப்படி விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பிறகாவது, இதுபோன்று வீட்டிலேயே தங்கி வீட்டு வேலைகளை செய்துவரும் பணிப்பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்; அந்தந்த போலீசு நிலையங்களின் வாயிலான தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

– அங்குசம் புலனாய்வு குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.