அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அடல்ட் ஸ்ட்ரீமிங் இண்டஸ்ட்ரி ! 2000 கோடி புழக்கம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாத ஒரு அடல்ட் ஸ்ட்ரீமிங் இண்டஸ்ட்ரி  உருவாகி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பல instagram நடிகைகள் எல்லாம் அதில் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் சமீபத்தில் தம்பதி சமேதமாக நிறைய பேர் அதில் இறங்கி இருக்காங்க. அவர்களின் தினமும் இரவு, பகல் என்று பார்க்காமல் ஸ்ட்ரீமிங் செய்கிறார்கள்‌, இதை செய்ய வேண்டுமா 2000 போடுங்க, இதுக்கு 10000 என்று பேசுகிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

எல்லாமே விளிம்பு நிலை மக்கள். தினமும் 500- 100‌0க்கு கஷ்டப்படுபவர்கள். சரி, இவங்க எல்லாம் எப்படி இதுல வருகிறார்கள் என்று பார்த்தால் ஏஜெண்ட் மூலமாக சிலர் வருகிறார்கள். என்னது இதற்கு ஏஜென்ட் ஆ என்று ஆச்சரியப்பட்டு விசாரித்துக்கொண்டே சென்றால் அது ஒரு மிக பெரிய வலைப்பின்னல் அமைப்பாக இருக்கிறது.

ஸ்ட்ரீமிங்சரி, இது கொஞ்சம் middle class – high பட்ஜெட். வாரத்திற்கு 3 ஆயிரம் – 5 ஆயிரம் வரை சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு என்று வேற சில ஆப் களை கொண்டு வீடியோ கால் பேசுங்க என்று பல ஏஜெண்டுகள் தமிழ்நாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அதுல பலர் ஏழை கூலி வேலைக்கு செல்லும் பெண்கள். இப்படி ஓர் parallel industry இயங்குகிறது என்று அரசுக்கு தெரியுமா என்று தெரியல.

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சென்னை மட்டுமில்லை, பல்வேறு மாவட்ட கிராமத்து கூலி வேலைக்கு செல்லும் பெண்களையும் இந்த நெட்வொர்க் இழுக்கிறது. கேட்டால் வாரம் 4 ஆயிரம் தருகிறார்கள் என்று சொல்கிறார்கள். அனைவருமே மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வருபவர்கள்.

இதுல இல்லாத தமிழ்நாடு மாவட்டம் கிராமம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலை கைமீறி போகிறது.

டிஜிட்டல் literacy மற்றும் இது போல பிரச்சினைகளை பள்ளியில் இருந்தே வகுப்பாக சேர்க்க வேண்டும். மேலும் பல்வேறு விளிம்பு நிலை மக்களுக்கும் இதன் தேவை அதிகரிக்கிறது. எந்த ஒரு ஆப் பெயரை எழுத விருப்பம் இல்லை. ஆனால் பெரிய நெட்வொர்க் ஆக இதுல வருசத்துக்கு 1000 கோடி முதல் 2000 கோடி தமிழ்நாட்டில் மட்டுமே புழங்குகிறது என்பது உண்மை.

 

—   சேஷாத்ரி தனசேகரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.