அட, கல்யாண பத்திரிக்கையை இப்படியும் கொடுக்கலாமா ?

0

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கடல்வாழ் உயிரினங்கள், மற்றும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளார்கள்.

இருப்பினும் பொதுமக்கள்  பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

துணிப்பைதிருச்சியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவதை வலியுறுத்தி நூதன முறையில் திருமண  அழைப்பிதழை  துணிப்பையில் அச்சிட்டு  கொடுத்து வருகிறார்கள்.

அடுத்த தலைமுறைகாக பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவோம் , இயற்கை வளத்தை காப்போம் என திருமண அழைப்பிதழ் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

marriage card 3
marriage card 3

பல ரூபாய் செலவு செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வீடு தோறும்  கொடுத்தால் திருமண நாள் அன்று குப்பைத்தொட்டியில் தான் இருக்கும், ஆனால் இதுபோல துணிப்பை கொடுத்தால் பல வருடங்கள் கொடுத்த எல்லார் வீட்டிலும் நினைவாகயும், பயனாகவும் இருக்கும்.

இந்த மணமக்களை வாழ்த்துவதோடு, நூதன முறையில் துணிப்பையில் திருமண அழைப்பிதழ் அச்சுட்டு வழங்கும் குடும்பத்தாரையும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு  சார்பாக பாராட்டுகளுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

— தகவல்: கே.சி.நீலமேகம்.

Leave A Reply

Your email address will not be published.