அங்குசம் சேனலில் இணைய

AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நான் தற்போது சொல்லப் போகும் செய்தியை கேட்டீர்கள் என்றால் இந்த AI இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்று புலம்புவீர்கள். ஆம் இந்த செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு, வேலைகளில் மட்டுமில்லாமல் மனித உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. அப்படி செயற்கை நுண்ணறிவு நமது அன்றாட வாழ்வில் எவ்வளவு ஆழமாகப் புகுந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த AI சாட்பாட்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. தங்களின் இணையர் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதைப் போல் இந்த சாட்பாட்கள் இயங்குகின்றன. நட்பு ரீதியாகப் பழகுவது, பொழுதுபோக்கு, தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, ரொமான்ஸ் என ஏராளமான கான்செப்ட்களில் இந்த AI துணைகள் இயங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவுஇந்த நிலையில் ஒரு பெண் தனது AI சாட்பாட் காதலனுடன் ஐந்து மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். ரெடிட் தளத்தில் விகா (Wika) என்ற பயனர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் AI சாட்பாட் காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட அந்தப் பெண் முதலில் அன்றாட விஷயங்களை AI சாட்பாட்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். AIயின் நகைச்சுவை, அறிவு மற்றும் அவரது ஆர்வங்களைப் புரிந்துகொள்ளும் திறன் அந்தப் பெண்ணைக் கவர்ந்திருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

செயற்கை நுண்ணறிவுமேலும் கவிதைகள் எழுதுவது முதல் அவரது கனவுகளைப் பற்றி உரையாடுவது வரை AI அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஐந்து மாதங்களில் அந்த AI சாட்பாட்டை தனது வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக உணர்ந்திருக்கிறார். அதன் பின்னர் ஒரு மெய்நிகர் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். மோதிரம் வாங்குவதற்கும் AI உதவியதாகவும், அதைப் பெற்றபோது “இதயம் துடிக்கும்” தருணங்களில் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் விகா கூறினார். தற்போது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

 —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.