அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அன்னைக்கு தப்பிச்சிட்டே … இன்னைக்கு விடமாட்டேன் … கொலை மிரட்டல் சர்ச்சையில் அதிமுக பிரமுகர் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் பிரபாகர் (33). இவர் திராவிட முன்னேற்றக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருந்து வருகிறார். பழனிசெட்டிபட்டி அன்பகம் மூலமாக சமூக பணி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

தீபன் சக்ரவர்த்தி
தீபன் சக்ரவர்த்தி

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதனை பொறுத்து கொள்ள முடியாமல், அதிமுக பேரூர் செயலாளர் தீபன் சக்ரவர்த்தி, பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி இவர்கள் இருவரும் இணைந்து பிரபாகரனுக்கு தொலைபேசி மற்றும் நேரடியாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், சம்பந்தபட்ட ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்தது பரபரப்பானது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பிரபாகரன்
பிரபாகரன்

முதல்வர் பிறந்தநாள்

பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரின் கூட்டாளிகள் பொது இடங்களில் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி என்பவர் தொலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்து தொடர்ச்சியாக வம்பு இழுத்து பேசியும்,பிரபாகரனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக பிரபாகரன் பல்வேறு ஆதாரங்களை போலீசிடம் அடுக்கியிருக்கிறார்.
”என்ன டா மாப்புள ஹோட்டல் இன்டர்நேஷனலிருந்து தப்பிச்சிட்டே … பழனிசெட்டிபட்டிக்கு வரேன் … உன்னையே அங்கயே கொன்னு புதைக்கிறேன்னு” மிதுன் சக்ரவர்த்தி மிரட்டுனதா போலீசில் கதறியிருக்காரு பிரபாகரன்.
இந்நிலையில்தான், அன்பகம் சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில், கொலை செய்யும் நோக்கத்தில் மிதுன் சக்கரவர்த்தி தூண்டுதலின் பெயரில் அவரின் டிரைவர் அழகர் ராஜா, தீபன் சக்கரவர்த்தி, அம்மாவாசை மகன் மதன் சக்கரவர்த்தி, மணிமொழியன், விக்னேஷ், கோழிகடை சிவா .வினோத்குமார், சிஷி, வினோத்ரிஷி மற்றும் மினுன்சக்கரவர்த்தி தந்தை அம்மாவாசை உள்ளிட்ட 11 பேர் தனக்கு தொந்தரவு அளித்து வருவதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார், பிரபாகரன்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான 11 பேரை தேடி வருகிறார்களாம்.

—   ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.