அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அதிமுக மாவட்ட அம்மணி இரத்தம் கொடுப்பது போல் போட்டோ ஷூட்! !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இரத்தம் கொடுக்காமல் இரத்தம்  கொடுத்தது போல் நடித்த அதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசுதா” வீடியோ வைரல் !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இரத்த தான முகாம்  இன்று காலை நடைபெற்றது. அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்று இரத்த தானம் வழங்கினர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசுதா
அதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசுதா

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா, இரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

https://www.livyashree.com/

பின்னர் தானும் இரத்தம் கொடுப்பது போல் சீன் ஒன்று அரங்கேற்றம் செய்யப்பட்டது  சாய்வு நாற்காலி மெத்தை ஒன்று கொண்டுவரப்பட்டது அதில் ஜெயசுதா ஏறி சாய்வாக  ஓய்வு எடுப்பது போல் அமர்ந்துக் கொண்டார் அவரை சுற்றி அப்பகுதி நிர்வாகிகள் நின்றுக்கொண்டனர்.

அதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசுதாபின்னர் ஊசி ஏதுமின்றி  அவர் போர்வைக்குள் ஒரு டியூபில் மட்டும் மறைத்து வைத்து கையில் பேண்டேஜ் ஒட்டப்பட்டது ,  ஆனால் அவர் இரத்தம் கொடுக்கவில்லை. தனது கையை மட்டும் காண்பித்தபடி  படுத்திருந்தவரை  அதிமுகவினர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்  எடுத்து  இணையத்தில் வெளியிட்டனர். தற்போது அது போலி இரத்ததானம் என  விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சுதாரித்து ஜெயசுதா அளித்த விளக்கம் !

“இரத்தம் எடுப்பதற்கு தான் தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. எனவே சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் இரத்தம் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

அதனால், நான் இரத்தம் கொடுத்தேன் என்று பேட்டி ஏதாவது கொடுத்தேனா. இதில் விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசுதாஜெயசுதாவுக்காவே திருவண்ணாமலை மாவட்டத்தை  மூன்றாக பிரித்து மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு ஜெயசுதாவை நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி , அப்போது அளித்த  பேட்டியில் , 2007ல் போளூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளராக அம்மா என்னை நியமித்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2018 ஆம் ஆண்டு என்னுடைய உழைப்புக்கு அங்கீகாரம் தரும் வகையில் போளூர் ஒன்றிய செயலாளராக என்னை நியமித்தார் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி.   அதன் பின் மாநில மகளிர் அணி துணை செயலாளராகவும் நியமித்தார் அண்ணன்.  இப்போது  என்னை மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறார். அண்ணன்   அண்ணன் என உருகி இருந்தார் ஜெயசுதா.

 

—   மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.