மருத்துவர்களுக்கு வலைவீசும் அதிமுக சரவணன்!
மருத்துவர்களுக்கு வலைவீசும் மதுரை சரவணன்!
எடப்பாடியாரின் எழுச்சி மாநாட்டை தொடர்ந்து, மதுரை யைச் சேர்ந்த மருத்துவர் சரவணனனுக்கு அவரே எதிர்பார்க்காத வகையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
மாநாட்டு வேலைகளில் அவர் காட்டிய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதில் படுகுஷியான மருத்துவர் சரவணன், மாவட்டங்கள் தோறும் மருத்துவர்களுக்கு வலைவீசி வருகிறாராம். சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்திவரும் மருத்துவர்களை பார்த்து பேசி, கட்சியில் இணைத்து வருகிறாராம்.
மாநிலம் முழுவதும் வலுவான மருத்துவர் அணியை உருவாக்கி, மாவட்டங்கள்தோறும் தொடர்ந்து மருத்துவமுகாம்களை நடத்துவது என்பது எதிர்கால திட்டமாம். பக்காவாக பிளான் போட்டு, அதற்கேற்ப பணியாற்றிவருகிறாராம் மருத்துவர் சரவணன்.
-ஷாகுல், படங்கள் – ஆனந்த்