
ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு.
மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன் ,உட்பட அரசு அதிகாரிகள் தலைமையில் திமுக அதிமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடித்து மீண்டும் கட்டுவதற்கு முறைப்படி நாளிதழ்களில் இந்த விளம்பரம் வெளியிட்டு டெண்டர் விடப்படவில்லை என்றும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கும் பூமி பூஜை விழாவிற்கு அதிமுக கவுன்சிலர்களையே அழைக்கவில்லை என்றும் மேலும் தங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் சம்பந்தமாக எத்தனை முறை முறையிட்டாலும் பொறியாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க மறுப்பதாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இனிவரும் காலங்களில் இந்த குறைகள் தீர்க்கப்படும் என ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி உறுதி அளித்தார்.
– ஷாகுல் மதுரை