மதுரையில் அதிமுக 50வது பொன்விழா, வெற்றிமாநாடு – அன்றே சொன்னது அங்குசம்!
மதுரையில் அதிமுக 50வது பொன்விழா, வெற்றிமாநாடு – அன்றே சொன்னது அங்குசம்!
கடந்த மே 1-15 தேதியிட்ட அங்குசம் இதழில் எம்.ஜி.ஆர். பாதையில் எடப்பாடியார்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் டாக்டர் சரவணன் தன்னை அதிமுக கட்சியில் இணைத்து கொண்ட விழா நடத்திய ஏர்போர்ட் பின்புரம் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள உள்ள தனியார் இடத்தில் நடத்துவதற்கு பரிசீலனை செய்வதாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அங்குசம் இதழில் சொன்னபடியே அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தலை மையில், மதுரை எஸ்பியை சந்தித்து, 20.08.2023 அன்று அதிமுக கட்சியில் 50ம் ஆண்டு பொன்விழா வெற்றிமாநாடு நடைபெறுகிறது என்றும், அதற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.
-ஷாகுல், படங்கள் – ஆனந்த்