ஈரான் அதிபரின் விமானம் விபத்து தேடும் பணிகள் தீவிரம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஈரான் அதிபரின் விமானம் விபத்து தேடும் பணிகள் தீவிரம்.  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவரை தேடும் பணிகள் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைஸி. இவர் அஜர்பைஜான் நாட்டில் கட்டப்பட்டு உள்ள அணை ஒன்றை திறப்பதற்காக அந்நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனிடையே வாகன தொடரின்போது ( கான்வாய்) ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிபர் பயணித்த ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதிபர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விபரம் கண்டறியப்பட்டு வருகிறது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அதிபர் இப்ராஹிம் ரைசி
அதிபர் இப்ராஹிம் ரைசி

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் அதிபரோடு மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்த விபத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? அல்லது விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். குறைந்தது 46 தேடல் மீட்புக் குழுக்கள் மற்றும் மோப்ப நாய்கள் இறக்கப்பட்டு ஈரானிய ஜனாதிபதியின் வானூர்தியை தொடர்ந்து தேடுகின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2013 முதல் 2021 வரை 8 ஆண்டுகள் பதவியில் இருந்த ஹசன் ரூஹானிக்குப் பிறகு இவர் பதவியேற்றார். 19 மே, ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது மற்றும் அவர் இறந்ததாக வதந்திகள் செய்திகள் வருகின்றன ஆனால் இவரது மரணம் ஈரானியரால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

யார் இந்த இரான் இப்ராஹிம் ரைசி

தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார். 63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார். 2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2019 ஆம் ஆண்டில், ஆயதுல்லா காமனெயி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார். அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • -மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.