அறிவாலயத்தில் நேர்காணல் எப்படி நடக்கிறது?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே மாவட்ட வாரியான நேர்காணல் அறிவிப்பை வெளியிட்டது தி.மு. தலைமை நிலையமான அறிவாலயம். புதுச்சேரி மாநிலத்தில் விருப்பமனு செய்தவர்களுக்கு 17ந் தேதி நேர்காணல் நடந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தெற்கு மண்டல மாவட்டங்களிலிருந்து, மேற்கு, வடக்கு, டெல்டா,சென்னை என நேர்காணல் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் இந்த நேர்காணல் நீடிக்கிறது. இது கலைஞர் காலத்திலிருந்து தி.மு..வில் தொடரும் வழக்கம்தான். ஒரு தொகுதியில் சீட் கேட்டு 20 பேர் விண்ணப்பித்திருந்தால் ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் செய்வது கலைஞர் கால வழக்கம். பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு..ஸ்டாலின் ஆகியோர் கலைஞருடன் உட்கார்ந்து நேர்காணல் செய்வார்கள். விருப்பமனு தாக்கல் செய்து நேர்காணலுக்கு வரும் சிலர், “எனக்கு சீட்டெல்லாம் வேணாங்க. தலைவரை நேரில் பார்க்கணும்னு ஆசை. அதற்காகத்தான் பணம் கட்டினேன்என்று சொல்லி, படம் எடுத்துக்கொண்டு போய்விடுவது அப்போதைய வழக்கமாக இருந்தது. மற்றவர்களிடம் தொகுதி நிலவரம், சாதி செல்வாக்கு, பண பலம், யார்யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து கேட்டுப் பதிவு செய்து கொள்வார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

திமுக வேட்பாளா்கள் நேர்காணல்இப்போது மு..ஸ்டாலின் தலைமையிலான தி.மு..வில் நேர்காணலின் தன்மை மாறிவிட்டது. பேச்சைக் குறைத்து செயலில் வெற்றியைக் காட்ட வேண்டும் என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். ஒரு தொகுதிக்கு எத்தனை பேர் விருப்பமனு செய்திருக்கிறார்கள் என்கிற பட்டியல் அவர் கையில் இருக்கும். அதற்கேற்ப நேர்காணல் அறையில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். தொகுதியின் பெயரைச் சொன்னதும், விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அனைவரும் உட்கார்ந்ததும், முதன்மைச் செயலாளர் அல்லது அமைப்புச் செயலாளர் தன் கையில் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களைப் படிப்பார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று பார்த்து கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் குறித்துக் கொள்கிறார். நேர்காணலுக்கு வந்தவர்களிடம் அவர் ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்கிறார். அது விவரம் தெரிந்துகொள்வதற்காக அல்ல. தன்னிடம் ஏற்கனவே உள்ள விவரங்களை சரியாக சொல்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான்தொகுதியின் நிலவரம் என்ன, வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, எந்தெந்த சாதிக்கு எவ்வளவு ஓட்டு இருக்கிறது, கட்சிக்குள் யார் யார் உள்ளடி வேலைகள் செய்கிறார்கள், தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கு என்ன, வேட்பாளராக தகுதி உள்ளவர் யார் என்கிற எல்லா விவரமும் ஸ்டாலினிடம் இருக்கிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

திமுக வேட்பாளா்கள் நேர்காணல்உளவுத்துறை தந்த ரிப்போர்ட், கட்சி சார்பில் எடுத்த ரிப்போர்ட், PEN Team தந்த ரிப்போர்ட், IT Wing சார்பிலான ரிப்போர்ட் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கச்சிதமான ரிப்போர்ட்டை கையில் வைத்துள்ள ஸ்டாலின், நேர்காணலுக்கு வந்தவர்களை நோக்கி புன்னகைத்தபடியே, “இங்கே உங்க எல்லாரும் உட்கார சீட் கொடுத்திருக்கோம்என்று தொடங்கி, “தேர்தலில் உங்களில் ஒருவருக்கு  மட்டும்தான் சீட் கொடுக்க முடியும். அதை நான் பார்த்துக்குறேன். ஜெயிக்கக்கூடியவங்களுக்குத்தான் நான் சீட் தருவேன். நீங்க எல்லாரும் சேர்ந்து ஜெயிக்க வச்சாகணும்என்று கறாராக சொல்லி அனுப்புகிறார்.

தனியாகப் போய் தலைவரை சந்தித்து, தனக்கு வேண்டாதவர்களைப் போட்டுக் கொடுத்து தனக்கு சீட் வாங்கிடலாம் என நினைத்து வந்தவர்கள் தெறித்துப்போய் வெளியே வருகிறார்கள்.

 

—  கோவி.லெனின்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.