ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் AITUC கட்சியினர் மறியல் போராட்டம்!
ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் AITUC கட்சியினர் மறியல் போராட்டம்!
கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள் போராடி பெற்ற வேலை பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமம் ஆகிய 44 சட்டங்களை ஒன்றிய அரசு 4 சட்டமாக மாறியதை திரும்ப பெறவும், நீட் வேளாண் போன்ற சட்டங்களை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை முழு மூச்சுடன் எதிர்த்து நின்றது.
ஆனால் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை எதிர்க்கும் என்று நம்பி மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலாகவும் நடிப்பது ஏன் கடந்த 2018 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் மூவமிர்தம் திட்டத்தில் பதிவு செய்த திருமணம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் தங்கமும் பணமும் இன்னும் வரவில்லை தமிழ் நாடு திராவிட மாடல் அரசு அதனை உடனே வழங்க கோரியும்
சுமைபணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.
பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள தனியார் விடுதியில் காவலில் வைத்தனர்.
-ஷாகுல்