அரசு கொடுத்த வீட்டுமனை பட்டா உபயோகம் இல்லாதது! – உயிரிழந்த அஜித் குமார் தம்பி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அஜித் குமார் படுகொலைக்கு நிவாரணமாக தமிழக அரசு கொடுத்த வீட்டு மனை பட்டா பயன் இல்லாதது. மேலும் 80 கிலோ மீட்டருக்கு அப்பால் எனக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை ரத்து செய்து அருகில் உள்ள மதுரையில் வழங்க வேண்டும் என அஜித்குமார் தம்பி நவீன் குமார் பேட்டி. …

தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதன் பொருட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்திருந்த அஜித்குமார் தம்பி நவீன் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்புவனம் காவல் நிலையத்தில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் தரப்படுவதாக கூறப்படுகிறது. அதற்காக உரிய பாதுகாப்பு கேட்டுள்ளோம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ajithkumar murderதற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் வேலை திருப்புவனத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தள்ளி உள்ளது. ஆகையால் அருகில் உள்ள மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து நான் வேண்டுகோள் வைத்துள்ளேன். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் அரசாங்க தரப்பில் இருந்து இல்லை.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

உயர் அதிகாரிகளின் அழுத்தமின்றி இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்காது ஆகையால் அவர்களையும் விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். தமிழக அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா அமைந்துள்ள இடம், வளர்ச்சி அடையாத பகுதி. ஆகையால் இந்த ஒதுக்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. வீட்டுமனை என்பதை விட சித்திரவதையால் இறந்து போன எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தற்போது இந்த வழக்கில் உள்ள முக்கியமான சாட்சியங்களுக்கு பாதுகாப்பு அளிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றார்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.