அஜித்தா…? அலறிய தயாரிப்பாளர்கள்! சிக்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ அட்டர் ஃப்ளாப் ஆனதால் நொந்து நொம்பலமானது படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம். அடுத்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த ‘குட் பேட் அக்லி’ 300 கோடி வசூலித்ததாக சொல்லப்பட்டாலும் எதிர்பார்த்த லாபல் இல்லை. போட்ட முதல் திரும்பி வந்ததால் தப்பித்தது மைத்ரி மூவி மேக்கர்ஸ். ’கு.பே.அ.’வை முடித்துவிட்டு கார் ரேஸுக்கு கிளம்பிய அஜித், இடையில் சில வாரங்கள் சென்னை திரும்பி, தனது 64-ஆவது படத்திற்கும் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனை செலக்ட் பண்ணிவிட்டு, தயாரிப்பாளர்களைத் தேடினார்.
அஜித்தின் தற்போதைய சம்பளத்தை [ 220 கோடி]கேட்டதும் சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு உட்பட சில முன்னணி தயாரிப்பாளர்கள் அலறியடித்து ஓடிவிட்டனராம். இப்போது அஜித்திடம் சிக்கியிருக்கிறார் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். அஜித்தின் சம்பளமாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் ரைட்சை பேசினாராம் ராகுல். ஆனால் அஜித்தோ தியேட்டர் கலெக்ஷனிலும் ஷேர் கேட்டு ஷாக் கொடுத்தாலும், “எஸ் பாஸ்…ஓகே பாஸ்” எனச் சொல்லிவிட்டாராம் ராகுல்.