அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழுவின் ஆலோசனை கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழுவின் சார்பில் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் விடியல் வீர பெருமாள் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் இ. குமரலிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்குசம் தொலைக்காட்சியில் வெளியான டைரியில் ஆவணங்களின்படி கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறிய வச்சக்காரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர் மற்றும் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மீது ஜூனியர் விகடனில் வெளியான முறைகேடு தொடர்பாகவும் கனிமவள கொள்ளைக்கு துணை போன அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை மீது விசாரணை செய்திட சிபிசிஐடி காவல்துறை மூலம் விசாரணை நடத்திட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
24 .2 .25 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தும் உரிமை கேட்டு அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழுவில் தோழர்கள் மீது பாரபட்சத்தோடு வழக்கு பதிவு செய்ததை திரும்ப பெற வேண்டும் ஒடுக்கும் நோக்கத்தோடு செயல்படுவதை கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழுவின் சார்பில் 03.03.25 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் தோழர் சக்கணன் நகரச் செயலாளர் தோழர் காதர் முகைதீன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு உறுப்பினர் தோழர் முருகேசன் மக்கள் நீதி மையம் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் காளிதாஸ் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாலமுருகன் கஜேந்திரன் விசிக சக்திவேல் ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுப்புராஜ் தலித் விடுதலை இயக்கம் காங்கிரஸ். திராவிட கழகம் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
— மாரீஸ்வரன்.