கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘ அமரன்’ வர்றார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘ அமரன்’ வர்றார்!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்சன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு ‘அமரன்’ என்ற டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக் கையும் ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்சன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் படத்தின் கதை அமைந்துள்ளது.

எழுதி-இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி, நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு, கவனமாக ‘அமரன்’ திரைப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். இது நிச்சயமாக தமிழ் மற்றும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சாதனையை நிகழ்த்தும்! சிவகார்த்திகேயன், நிஜவாழ்வின் நாயகனான ஒருவரின், தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று, அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும், மிகுந்த திறமைசாலியான சாய் பல்லவியுடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார். சாய் பல்லவி, இந்தப் படத்திற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

‘அமரன்’ திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், சண்டைக்காட்சி இயக்குனர் ஸ்டீஃபன் ரிச்டர், உடை வடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ச ன்ஸ் நிறுவனம் தெலுங்கு திரையுலகில் தங்கள் முதல் தயாரிப்பான ‘மேஜர்’ மூலம் மிகுந்த புகழ்பெற்றவர்கள்,இப்போது ‘அமரன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைகிறார்கள்.

RKFI நிறுவனத்தின் 50-வது படமான ‘விக்ரம்’ 2022-ல் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் 51-வது படைப்பான ‘அமரன்’ திரைப்படமும் வெற்றிகரமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டைக்காட்சிகளும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் மிகச்சரியான கலவையாக அமைந்திருக்கும் ‘அமரன்’ திரைப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. இந்த கோடை விடுமுறையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ்.

Teaser Link 🔗 https://youtu.be/A76db9lX2fE?si=qQMZ5K3hl5F61v0I

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.